பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 நினைவு அலைகள்

‘இத்தகையவற்றை நான் விரும்புகிறேனா இல்லையா என்று பாராமல், விதிமுறைகளின் அடிப்படையில் முடிவு செய்வதே நிர்வாகத்திற்கு நல்லது.

‘'உயர்நிலைப் பள்ளிக்கு என்று, பொருத்தமான தனிக் கட்டடம் இல்லாத நிலையில் சாதாரணமாக என்ன அனுமதி கொடுப்பீர்கள்?” என்று முதலமைச்சர் திரு காமராசர் கேட்டார்.

“புதிய கட்டடம் கட்டுவதை எதிர்பார்த்து முதல் மூன்று படிவங் களைத் தற்காலிகமாக அனுமதிப்போம், கட்டட வேலை முடிந்த பிறகு ஒன்பது, பத்து, பதினோராவது வகுப்புகளை ஆண்டுக்கு ஒன்றாக அனுமதிப்போம்’ என்றேன்.

‘சரியான போக்கே வாக்குறுதியை மட்டும் நம்பி எடுத்த எடுப்பிலேயே, கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டால், அப்புறம் செயற்குழு உறுப்பினர்கள் அவரவர் தொழிலைக் கவனிக்கப் போய்விடக்கூடும். அடியோடு அனுமதி மறுத்துவிட்டால், ஊரார் மகமைப் பணத்தைச் செலவிட முடியாது. இதுவரை பின்பற்றும் நடைமுறை இனியும் தொடரலாம்’ இப்படி ஆணையிட்டார். காமராசர்.

நான் பணிவான குரலில்,

‘தாங்கள் விரும்பினால், அவர்கள்கேட்டுள்ள முதல் நான்கு படிவங்களையும் கொடுப்பதாக, இயக்குநர் என்னிடம் கூறி அனுப்பினார்’ என்றேன்.

இந்தப் பள்ளிக்கூடம் தொடங்கப் போகிறவர்கள் எனக்கு வேண்டிய வர்கள்தான். அவர்கள், அரசின் விதிமுறைக்குக் கட்டுப்பட்டால்தான் மற்றவர்களைக் கட்டுப்படுத்த முடியும். a

‘மூன்று படிவங்கள் கொடுத்தால் போதும் என்று இயக்குநரிடம் சொல்லுங்கள்’ என்ற கட்டளையோடு பேட்டியை முடித்துக் கொண்டார்.

நான் காமராசரை நேரில் கண்டு பேசியது, அதுவே முதன் முறை. அவரைச் சட்டம், விதி முறைகளுக்கு மதிப்பு அளிப்பவராக மதிப்பிட்டேன். பின்னர் ஒன்பது ஆண்டுகள் அவரிடம் இயக்குநராகத் தொண்டாற்றும் பேறு கிடைக்குமென்பது அப்போது தெரியாது. அந்த ஒன்பது ஆண்டுகளில் என் முதல் மதிப்பீட்டை மறு பரிசீலனை செய்ய நேரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/468&oldid=623403" இலிருந்து மீள்விக்கப்பட்டது