பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு , 31

தாயை இழந்தேன்

இமைப்பொழுது தலை சுழன்றது: உலகம் சுழன்றது; சிந்தனை

சூன்யம் ஆயிற்று. அங்கே உட்கார்ந்து இருந்த ஒராசிரியரிடம்

தந்தியைக் காட்டினேன்.

அதைப் படித்துவிட்டு, ஆசிரியர் வந்தவரை விசாரணை செய்தார். ‘இந்தத் தந்தியைப் பிரித்தது யார்? இதை உன்னிடம் கொடுத்தது

யார்?’ என்பவை கேள்விகள்.

‘அய்யா விட்டு அம்மா, வாங்கினார்கள்; பிரித்துப் பார்த்தார்கள்; செய்தியைப் படித்ததும் பதறினார்கள்.

‘அப்போது, என் வீட்டுக்காரி அந்த அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தாள். அவள் என்ன செய்தி என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். உடனே வீட்டிற்கு வந்தாள்.

‘திருப்பூர் சென்றிருக்கும் அய்யாவிடம் நேரில் அத் தந்தியைக் கொடுத்துவிட்டு வரும்படி சொன்னாள்.

‘அய்யா வீட்டிற்கு வந்து, தந்தியை வாங்கிக் கொண்டு, புறப்பட்டேன். திருப்பூர் வந்ததும் நகராட்சி பயணிகள் விடுதிக்குச் சென்றேன். அங்குள்ள காவலர், என்னை இங்கே அனுப்பிவைத்தார்’ என்று சொன்னார்.

தந்தி கொடுத்த பெயரை என்னால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. சென்னையில் இருந்த என் நேர் இளவல் சிவானந்தத்திற்கு வந்த தந்தி. அதைச் சிறு குறிப்போடு எனக்கு அனுப்பி இருந்தான்.

‘இச் ெய்தி மெய்யாக இருக்குமா’ என்று, தந்தியைப் படித்த ஆசிரியர் கேட்டபோது, எனக்கும் அப்படியொரு அய்யம் எழுந்தது.

‘பொய்யாக இருக்க வேண்டும் என்று அவாவினேன். ‘ அவாவிப் பயன்?

இதற்குள், அச்செய்தி, ஏதோ ஒரு வகுப்பில் இருந்த மாவட்டக் கல்வி அலுவலர் காதுக்கு எட்டியது. அவர் என்னைத் தேடி வந்தார்: தலைமை ஆசிரியரும் உடன் வந்தார். தந்தியை வாங்கிப் பார்த்தார்கள்.

‘அவர்களுக்கு எவ்வளவு காலமாக, உடம்பு நன்றாய் இல்லை?” இருவரும் கேட்ட ஒரே கேள்வி.

‘என் வீட்டோடு, எனக்குக் கடிதத் தொடர்பு இல்லை. உடம்புக்கு என்ன? எவ்வளவு நாளாக நோய், இத் தகவல்கள் காற்றுவாக்கிலும் எனக்கு எட்டவில்லை’ என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/47&oldid=623405" இலிருந்து மீள்விக்கப்பட்டது