பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 457

‘எனவே ‘வெங்கடேசுவர பல்கலைக்கழகத் துணை வேந்தரை நியமிக்கும் பொறுப்பு ஆந்திர மாநிலத் தலைமை நீதிபதியினுடையது.

‘தலைமை நீதிபதி, மாண்பமை சுப்பாராவ் சென்னை மாநில அரசுத் தலைமைச் செயலர் திரு இராமுன்னி மேனனனுக்கு நேரடியாக இரகசியக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

“புதிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக, இயக்குநர் கோவிந்தராஜுலுவை அனுப்பி உதவும்படி வேண்டிக் கொண்டார். அரசு ஊழியராகிய நாயுடுவை அனுப்புவது பற்றி, முதலமைச்சர் காமராசர், கல்வி அமைச்சர் சி. சுப் பிரமணியம், நான், தலைமைச் செயலர்ஆகியோர் இரண்டு நாள்களுக்குமுன் கலந்து ஆலோசித்தோம்.

‘தலைமை நீதிபதியின் கடிதத்தைப் படித்து முடித்ததும் காமராசர், தலைமைச் செயலரைப் பார்த்து, ‘உங்கள் ஆலோசனை என்ன? “ என்று கேட்டார். -

வேண்டும் என்றால் அனுப்பலாம். அப்படி அனுப்பிவிட்டால் நமக்கு முதிர்ந்த இயக்குநர் கிடைப்பது அரிது’ என்றார், தலைமைச் செயலர்.

‘அனுப்பமாட்டோம் என்றால், அண்டை மாநிலத்தோடு நல்லுறவு இருப்பது கெடாதா? இப்படி முதலமைச்சர் கேட்டார்.

“ஆமாம், கெடும். நாயுடுவிற்குப் பதில் இயக்குநர் பதவிக்கு இருவரைக் கவனிக்க வேண்டும். இருவருமே இளைஞர்கள்; நாற்பத் திாண்டு வயதினர்.

‘இருவரில் எவரை நியமித்தாலும் அவர் பதின்மூன்று ஆண்டுகள் முரே இயக்குநர் பதவியில் இருப்பார். இது நல்லதா? என்று மெல்ல ழுெத்தார், தலைமைச் செயலர்.

‘நாயுடுவை அனுப்பி வைப்பதனால் இவ்விருவருக்குப் பதில், வேறு எவரையாவது நியமிக்கும் சாத்தியக்கூறு இருக்கிறதா? இது முதலமைச்சர் காமராசரின் கேள்வி.

‘இந்திய ஆட்சி அணி’, ‘இந்திய சிவில் அணி இவற்றைச் சேர்ந்த ாவாையாவது கவனிக்கலாமா? என்று தலைமைச் செயலர் விளைவினார்.

‘கல்வியின்பால் தனி நாட்டமுடைய எவராவது இருந்தால் அவயையும் கருதலாம் என்றார் முதல் அமைச்சர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/473&oldid=623409" இலிருந்து மீள்விக்கப்பட்டது