பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெ. து. சுந்தரவடிவேலு 459

‘தலைமைச் செயலர் மீண்டும் வற்புறுத்தியதால், ஆணையத்தின் மதிப்பீட்டைப் பெற்று, டாக்டர் பாலை யாவது உங்களையாவது நியமிப்பார்கள். உங்கள் இரகசியப் பதிவு நன்றாயிருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார் அமைச்சர் பக்தவசத்சலனார்.

‘எவர் கோப்பு எப்படி இருக்கும் என்று நான் உளவு பார்த்தது இல்லை. அரசின் முடிவு நியாயமானது. அதன் அடிப்படையில் எவருக்குக் கிடைத்தாலும் சரிதான்’ என்று அடக்கமாகப் பதில் கூறினேன். அதோடு, அமைச்சர் விடை கொடுத்தார்.

வீடு திரும்பியதும் நாங்கள் பேசிக்கொண்ட இரகசியம் பற்றி காந்தம்மா கேட்டார். நான் வெளிப்படுத்தவில்லை.

இரு திங்கள், நான் பள்ளி, கல்லூரி விழாக்களுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன். அலுவலகம் உண்டு, வீடு உண்டு என்று இருந்தேன்.

என் வாய் மூடிக்கிடந்ததால், ஊர் வாயும் மூடிக்கிடக்குமா?

இயக்குநர் பதவி காலியாகப் போகிறது என்ற செய்தி காற்றில் கலந்து பாவிற்று. பலர் சுறுசுறுப்பாயினர். எனக்குத் தெரியாமலே திரு காமராசருக்குத் தந்தை பெரியார் , என் பெயரைப் பரிந்துரைத்தது சில திங்களுக்குப்பின் வெளியாயிற்று.

அதேபோல் எனக்குத் தகவல் இல்லாமல், எனக்காகச் சிலரும் வலியப் பரிந்துரைகள் வழங்கினர்.

அவர்களில் ஒருவர் செய்யூர் திரு வி. கே. இராமசாமி முதலியார். அவர் அப்போது காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்.

மற்றொருவர், கிளியானுார் வெங்கட கிருஷ்ண ரெட்டியார். அக் காலகட்டத்தில் அவரை எனக்கு அறிமுகமேயில்லை.

என்னைப் பற்றிக் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு, சொந்த மதிப்பீட்டின்படி, எனக்கு ஆதரவாகச் செயல்பட்டு இருக்கிறார்.

சென்னையில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற தியாகிகளில் ஒருவர் - காமராசருக்கு வேண்டிய ஒருவர்- எனது

மாநகராட்சிப் பணிக் காலத்தில் எனக்கு வேண்டியவரானார். பகாளத்தைச் சேர்ந்த அத் துறவி. ஒரு நாள் காலை, என்னைத் தேடி வந்தார்; என்னை முதல் அமைச்சர் காமராசரிடம் அழைத்துப் போக

முயன்றார். இயக்குநர் பதவியை எனக்குப் பெற்றுத்தர விழைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/475&oldid=623411" இலிருந்து மீள்விக்கப்பட்டது