பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 460 நினைவு அலைகள்

அவருடன் செல்ல மறுத்துவிட்டேன். ‘நல்லவர்களின் நல்லெண்ணம் போதுமென்று நயமாகச் சொல்லி அனுப்பினேன்.

எனச மாவட்டத்தைச் சேர்ந்த திரு வ. கந்தசாமி என்பவர், அப்போது இச்.ெய அரசு பொதுப்பணித்துறையில் மேற்பார்வைப் பொறியாளராக இருந்தார். அவருக்குப் பெரிய மனிதர்கள் வேண்டியவர்கள் பலர்.

அவருக்கு நான் பதவி உயர்வுபெறவேண்டும் என்ற எண்ணம். நான் எவரையும் போய்ப்பார்த்துக் கேட்கவில்லை என்பது குறை.

எனவே வலிய வந்து, என்னை அப்போது சென்னைக்கு வந்திருந்த இந்திய அமைச்சர் மாண்புமிகு அளகேசனிடம் அழைத்துப்போய், என் பதவி உயர்வுக்காகப் பரிந்துரைக்க முயன்றார்.

அதற்கும் நான் உடன்படவில்லை. பலரைப் போல, அவரும் என்னை “ஆணவக்காரனென்று நினைத்துவிட்டு இருந்தால் வியப்பில்லை.

டாக்டர் எம்.டி. பாலுக்காகப் பரிந்துரைகள் பல இருந்தன.

எல்லோர்க்கும் ஒரே பதில், ‘பார்க்கலாம் என்பதற்கு மேல் முதலமைச்சர் குறிப்பு காட்டவில்லை.

என் நண்பர் பாலுக்காகப் பரிந்துரைத்தவர்களில் ஒருவர், ஒரு சமயம் தவறான துருப்புச் சீட்டைப் போட்டுவிட்டார்.

‘நெ.து. சு. இராசாசியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராகக் குறிப்பு எழுதினார். ஆனால் அரசு அத் திட்டத்தைச் செயல்படுத்தியபோது, அவர் பல ஊர்களுக்கும் சென்று அதே திட்டத்துக்குப் பேசி ஆதரவு திரட்டினார்.

‘பின்னர் டாக்டர் பால் அப் பதவியை ஏற்றுக் கொண்டபோது திரு. ஜி. இராமசந்திரனோடு ஊர்ஊராகச் சென்று ஆசிரியர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தாரே ஒழிய, எந்தக் கூட்டத்திலும் அது பற்றிப் பேசவில்லை. வரவேற்புரை நன்றியுரை என்று கூடப் பேசவில்லை.

‘ஆகவே, டாக்டர் பாலை நியமித்தல் நல்லது’ என்று முதலமைச்சர் காமராசரிடம் பரிந்துரைத்தார்.

முதலமைச்சரின் மதிப்பீடு வேறு வகையில் இருந்தது. அது என்ன?

‘நீங்கள் சொன்ன பிறகே, நினைவிற்கு வருகிறது. ஆமாம். நெ.து.க. அஞ்சாமல் ஆட்சேபனை சொன்னார். அதைப் பாராமல், அரசு வேறு விதமாக ஆணையிட்டபோது, அதை நிறைவேற்ற உண்மையாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/476&oldid=623412" இலிருந்து மீள்விக்கப்பட்டது