பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 461 - -

பாடுபட்டார். அந்த அளவிற்கு அவரிடம் கட்டுப்பாடு இருந்தது’ என்று முதலமைச்சர் முடிவு சொன்னபோது பரிந்துரைத்தவர் பதறிப்போனார்.

பரிந்துரைகள் பல இருந்தும் எந்த அடிப்படையில் இயக்குநரைத் தேர்ந்து எடுப்பது என்று முடிவு செய்தார்களோ, அதிலிருந்து நழுவவில்லை.

வளழியர் ஆணையத்தின் கருத்து கோரப்பட்டது. அது என்னுடைய தகுதியே அதிகம் என்று மதிப்பிட்டது.

1954ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் மாலை 4 மணிக்கு இயக்குநருக்குப் பதில், நான் கல்வித் துறை ஆசிரியர்களைப் பொறுக்கும் பணி பற்றி, ஊழியர் ஆணையக் கூட்டத்தில் இருந்தேன்.

தலைமைச் செயலகத்திலிருந்து இந்து நிருபர் நெ.து. சு. விடம் நேரில் பேசத் துடிப்பதாக, ஆணையச் செயலர் ஆணையத் தலைவருக்குக் குறிப்பு அனுப்பினார்.

அவர் அதை என்னிடம் காட்டிப் போய் வரும்படி குறிப்புக் காட்டினார் நான் அதை விரும்பவில்லை.

மீண்டும் அவர் சாடை காட்டினார். செயலர் அறைச்குச் சென்றேன். தொலைபேசியில் பேசினேன்.

இந்து நிருபர் என்னை இயக்குநராக நியமித்திருப்பதாகவும், அதற்காக என்னைப் பாராட்டுவதாகவும் கூறினார்.

‘இது விழைவா? நடந்துவிட்ட செய்தியா?’ என்றேன்.

நியமன ஆணையின் எண்ணைப் படித்தார். உண்மை என்று _ணர்ந்தேன்.

‘இச்செய்தியை வெளியிடும்போதே உங்கள் படத்தையும் வெளியிடவேண்டும். தங்களைப் படம் எடுக்க, எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கே வந்து கொண்டிருக்கிறார். தயவு செய்து இரண்டு நிமிடம் வெளியே வந்து, படம் எடுக்க உதவுங்கள்’ என்று அந்நிருபர் பகட்டுக் கொண்டார்.

பதினைந்து மணித்துளிகள் ஓடின. புகைப்படக்காரர் வந்து தலை |ட்டினார்.

ஆணையத்தலைவரிடம் கேட்டுக்கொண்டு படம் எடுக்க மூன்று _ளிதி, துளிகள் செலவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/477&oldid=623413" இலிருந்து மீள்விக்கப்பட்டது