பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii

பதிப்புரை

இன்றைக்குத் தமிழகத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வானியல், கணிப்பொறி இயல், அணுவியல் துறை, உயிரிதொழில்நுட்பவியல் எனப் பல்வேறு அறிவியல் துறைகள் காலத்திற்கு ஏற்ப வளர்ந்து புகழ்பெற்றுள்ளன. இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த கல்வியைப் பொதுவுடைமை யாக்கிய தமிழ்ச் சான்றோர்களை நாம் மறக்க முடியாது!


அறிவியலின் பல்துறை வளர்ச்சிக்கு அடிப்படை அமைத்துச் கொடுத்த அத் தமிழ்ச் சான்றோர்களுள் - குறிப்பாகக் கு. காமராஜ், சி. சுப்பிரமணியம் ஆகிய இருவரும் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் பேரியக்கத்தில் நேரிடையாகப் பங்கு பெற்றவர்கள்; கல்வித் துறையில் அரும்பணியாற்றிய நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் மாணவப் பருவத்திலேயே மறைமுகமாக அவ்வியக்கத்துக்கு ஆதரவு காட்டியவர். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், கல்வித் துறையின் வளர்ச்சிக்கும், பாமரமக்களும் கல்வி அறிவைப் பெற்று உயர்வதற்கும் இவர்கள் காட்டிய அக்கறையையும் உழைத்த உழைப்பையும் வரலாற்றுச்சுவடிகளைத் திருப்பிப் பார்ப்போர் மறுக்க முடியாது!

இப்பெருமக்கள், இந்த மாபெரும் சமுதாயத்தில் உச்ச நிலையை எட்டிய பிறகும், அடிப்படை விதிமுறைகளை எப்போதும்போல் கடைப் பிடித்தார்கள்; தங்கள் சமுதாயம் உயரக் கடினமாக உழைத்தார்கள்; அரும்பாடுபட்டார்கள். தாங்கள் சார்ந்த சமுதாயத்தின் உயர்வுக்குப் பாடுபடல் என்கிற குறிக்கோளை எட்டுவதற்கு, பின்விளைவை எதிர்நோக்கிய சிந்தனை, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டம், சுயநலம் சிறிதும் கலவாத அர்ப்பணிப்பு, ஊக்குவிப்பு, தியாகம், ஒழுக்கம், பணிவு, சகிப்புத் தன்மை, குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட குறியை எட்டுவதற்கு மேற்கொண்ட செயல் திறன், பொறுமை முதலான அடிப்படைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/5&oldid=623418" இலிருந்து மீள்விக்கப்பட்டது