பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவே 35 | “A “: 9al

இங்கே, லிங்கம் என்றது, தன்மான இயக்கச் செயல் வீரர்களில் முருவாகிய மாயவரம் எஸ்.வி. லிங்கம்தான்.

பொன்னம்பலனார் என்பது அவ் வியக்கத்தின் நாடியாக, பபச்சாளராக, எழுத்தாளராக, சுறுசுறுப்பான அமைப்பாளராக விளங்கிய பூவாளுர் பொன்னம்பலனார் அவர்கள்தான்.

எங்களுக்குத் திருமணமான சில திங்களில் அவர்கள் இருவரும் ாங்களை அழைத்துக் கொண்டுபோய், என்பெற்றோரோடு உடன்பாடு | படுத்தத் தீவிரமாக முன்வந்தார்கள். பெற்றோர்களின் கடும் சொற்களுக்கு அஞ்சின நான் அதற்கு உடன்படவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தோம். அது என்ன? நான் மட்டும் நெய்யாடுபாக்கம் செல்வது; என் தந்தையைக் கண்டு

ான் தாயின் இழப்பிற்கு ஆறுதல் கூறுவது; இருக்கச் சொன்னால், சில நாள்கள் அங்கே தங்கிவிட்டு வருவது, என்பதே எங்கள் முடிவாகும்.

அம்முடிவின்படி, அடுத்தநாள் மாலை நீலகிரி விரைவு வண்டியேறினேன். அரக்கோணத்தில் இறங்கி அங்கிருந்து செங்கற்பட்டு செல்லும் பயணிகள் வண்டியேறினேன். வாலாஜாபாத் புகைவண்டி நிலையத்தில் இறங்கினேன்.

ஒற்றைமாட்டு வண்டியை அமர்த்திக்கொண்டு, அதில் நெய்யாடு பாக்கம் சென்றேன். காலை பத்து மணியளவில் ஊர் போய்ச் பசர்ந்தேன்.

அதற்கு முன்பு, ஊருக்குச் சென்றால், முதலில் என் மாமா, அந்தரசேகரர் வீட்டிற்குச் செல்வேன். அங்கே பெட்டி பேழைகளை வைத்துவிட்டு, பிறகே, எங்கள் வீட்டுக்குச் செல்வேன்.

அப்பாவிடம் துக்கம் விசாரித்தேன்

இம்முறை, நேரே எங்கள் வீட்டிற்குச் சென்றேன். என் வீட்டில் ாவரும் என்னை எதிர்பார்க்கவில்லை.

என் வருகையைக் கண்டு, தந்தைக்கு அதிர்ச்சி. இரண்டொரு மணித்துளிகளில் சமாளித்துக் கொண்டார்.

‘கோயம்புத்துாரிலிருந்தா வருகிறாய்?’ என்று கேட்டார்.

‘ஆம் ‘ என்றேன். ‘வாலாஜாபாத்தில் இருந்து நடந்தா வந்தாய்?’

‘இல்லை; வாடகை வண்டியில் வந்தேன். ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/51&oldid=623420" இலிருந்து மீள்விக்கப்பட்டது