பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நினைவு அலைகள்

“அப்படியானால், வண்டியோட்டியைச் சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல். ‘

‘அம்மாவுக்கு என்ன நோய் எவ்வளவு காலம் நோயாக இருந்தார்கள்? எவர் மருத்துவம் பார்த்தார்கள்? இப்படிக் கேள்விகளை அடுக்கினேன்.

கண்கள், தாமாகவே செயல்பட்டன; கண்ணிரைச் சிந்தின. ‘இரத்தக் குறைவு; நாட்டு மருத்துவமே’ என்றார் தந்தை. மருத்துவ வசதிகள் குறைந்த காலத்தில் என் தாய் வாழ்ந்தார். இன்றும் பல கோடி இந்தியர்கள், அப்படியே வாழ்ந்து அல்லல் படுகிறார்கள்.

நமக்குள் பேச்சு குறைந்து, செயல்கள், ஆக்கமான செயல்கள் பெருகும் காலமும், ஒவ்வொருவர் வாழ்வதும் பிறரை வாழ்விக்கவே என்ற உண்மையான உணர்வும் வந்தால், பிஞ்சுகளாகவும் காய்களாகவும் இந்தியர்கள் வெம்பி வீழ்ந்து மறைவது நிற்கும்.

சில மணித்துளிகளில் எங்கள் வீட்டில் சிலர் கூடிவிட்டனர். அதிலே ஒருவர், எங்கள் மாமாவின் பண்ணையாள்; கொசப்பட்டான் என்பவர். அவரைக் கண்டதும், வடிவேலரை அழைத்துக் கொண்டுபோய், அவங்க அம்மா இடத்தைக் காட்டிவிட்டுவா’ என்று என் தந்தை ஆணையிட்டார்.

அப்படியே, கொசப்பட்டான் முன் செல்ல, நான் பின் தொடர்ந்தேன். எங்கள் ஊருக்கு வடக்கே ஒடும் செய்யாற்றிற்குச் சென்றோம்.

அப்போது, செய்யாறு வற்றிக் கிடந்தது. சுடுமணலில் நடந்தோம். எங்கள் வீட்டிற்குக் கிழக்கே, நடு ஆற்றில், ஒர் இடத்தை அடைந்தோம்.

‘இங்கேதான், அம்மாவிற்கு எரியூட்டினார்கள். ‘பெரிய பிள்ளை இல்லையே என்று எல்லோரும் ஏங்கினார்கள்.

‘அந்த மகராசிபோல் ஏழைகளுக்கு இனி யார், சோறு போடுவார்கள்? என்று கொசப்பட்டான் சொல்லும் போது, தொண்டை அடைத்துவிட்டது: கண்ணிர் பொழிந்தது.

என் நிலை என்ன?

தலை சுற்றிற்று. சிந்தனை நின்றது. கண்ணிர் மழை பெய்தது. பல்லைக்கடித்துக்கொண்டு, தாங்கமுடியாத சோகத்துடன் வீடு திரும்பினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/52&oldid=623421" இலிருந்து மீள்விக்கப்பட்டது