பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி| து. சுந்தரவடிவேலு 37

‘அம்மாவிற்குப் பதினாறாம் நாள் சடங்கு ஏதும் இல்லை. சிவானந்தம் கொள்ளி வைத்தான். அவன் இங்கே இருப்பான். நீ, வசதிப்படி செய்யலாம். இருக்க வேண்டுமென்றால் இருக்கலாம்; பபாக வேண்டுமென்றால் போகலாம் ‘ என்று என் தந்தையார் கூறினார்.

அன்று அங்குத் தங்கினேன். அடுத்த நாள் காலை, சிற்றுண்டிக்குப் பின், மாகறலுக்குச் சென்றேன்.

அது எங்கள் ஊரில் இருந்து மேற்கே அய்ந்து கல் தொலைவில் செய்யாற்றின் வட கரையில் இருக்கிறது.

சாதியில் திருமணம் செய்து கொள்

அவ்வூரில் அப்போது என் சித்தி - தாயாரின் தங்கை - நோய் வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தார். அவர் நிலையும் பாசமாக இருந்தது.

அவர்தான், நான் முதலில் படிப்பிற்காகக் காஞ்சிபுரம் சென்ற போது, ாாக்கும் என் மாமாவிற்குமாக, சமைத்துப் போட்டவர். அவரிடம் என் காயைப் போலவே பாசங்கொண்டிருந்தேன்.

என் சிறிய தாயார், திருப்புவனத்தம்மாளைப் படுக்கையில் கண்டேன். எழுந்து இருக்கமுடியாத அளவு மிகவும் மெலிந்து டிருந்தார். கஞ்சியே உணவு. அவருக்கும் ‘சோகை நோய்.

என்னைக் கண்டதும் சிறிய தாயார் கதறிக் கதறி அழுதார்.

‘உன் அம்மாவை உயிரோடு பார்க்காவிட்டாலும் என்னையாவது, பார்க்க வந்துவிட்டாயே! இனி, அமைதியாகக் கண்மூடி விடுவேன். அம்மா உன்னைக் காணக் கொடுத்து வைக்கவில்லை’ என்று அங்கலாய்த்தார்.

துயரங்களைப் பரிமாறிக் கொண்ட பிறகு, சிறிய தாயார் என்னிடம் முரி விளக்கம் கேட்டார்.

‘’ என் மனைவி மருத்துவ சாதியா? ‘

‘இல்லை. ‘

‘பின் என்ன சாதி , ‘ ‘இசை வேளாளர் சாதி. ‘’

‘சரி, மாகறலில் கூட, அவர்கள் வீடு இரண்டு மூன்று உண்டு. நம் ஆண்கள் சிலர், அவ்விடுகளுக்குப் போவதும் வருவதும் உண்டு ‘ என்று ஆறுதல் சொல்லிக்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/53&oldid=623422" இலிருந்து மீள்விக்கப்பட்டது