பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நினைவு அலைகள்

பிறகு, எனக்கு அறிவுரை கூறினார். அதில் குழைவு இருந்தது; பரிவு இருந்தது. நான் நான்கு பேர் மதிக்க வாழ வேண்டுமென்ற கவலை இருந்தது.

‘இப்பவோ, சிறிது நேரத்திலோ, என் ஆவி போய்விடும். அப்புறம் நான் என்ன கேட்கப் போகிறேன்? இந்த என் கடைசி ஆசையை நிறைவேற்றி வை. சரியென்று, ஒரு சொல் வந்தால், போதும் என்று என் சிறிய தாயார் கண்ணிரும் கம்பலையுமாக வேண்டுகோள் ஒன்றை உதிர்த்தார்.

‘வந்தவள் அதிர்ஷ்டத்திலே, உனக்குப் பெரிய வேலை கிடைத்திருக்கிறதாம். நல்லது, அவளும் இருக்கட்டும்; இன்னொருத்தி செகப்பா, இலட்சணமாக, நம்ம சாதியில் பார்த்து, முடிச்சு வைக்கச் சொல்லுகிறேன்; மறுப்புச் சொல்லாமல்கட்டிக்க. உன் வரும்படிக்கு இரண்டு பேர்களைக் கட்டிக் கொண்டா, குடிமுழுகிப் போகாது என்பது சிறிய தாயாரின் அறிவுரை.

நான் சிறிய தாயாருக்கு கடமைப் பட்டவன். அவர்களிடம் பரிவும் பாசமும் கொண்டவன். இருப்பினும் அழுத்தமாக மறுத்துக் கூறினேன்.

‘வழக்கமாகச் செய்து கொள்ளும் முறையில், நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அரசு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டு உள்ளேன். அப்படிச் செய்துகொண்டவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், சட்டம் அவரைச் சிறைக்கு அனுப்பி வைத்துவிடும்’ என்றேன்.

‘அப்படியென்றால், இருபதோ, முப்பதோ, மொத்தமாகக் கொடுத்து விட்டுப் போகச் சொன்னால் போகிறது. அதாவது அத்தனை ஆயிரங்கள். முதலில் நீ ஒப்புக்கொண்டால், அப்புறம் பேசிப் பார்க்கலாம். நான், இனி, என்ன கேட்கப்போகிறேன். ‘எப்படியாவது பெரிய மனது பண்ணி, நம் சாதிப்பெண் ஒருத்தியை மணந்து கொள். மாட்டேன் என்று சொல்லாதே. மொத்தமாகக் கொடுத்தனுப்பப் பணத்திற்கு நான் ஏற்பாடு செய்துவிடுகிறேன்’ என்று சிறிய தாயார் மன்றாடினார்.

பிறகு, என் சித்தப்பாவும் அதே பாட்டைப் பாடினார்.

பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்பாராத நிலையில், மீண்டும் இரண்டாவது மணம் செய்து கொள்ளும் ஆலோசனை என் காதுகளைத் துளைத்தது.

எப்படியோ ஒவ்வொரு முறையும் பொறுமையை வரவழைத்துக்

கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/54&oldid=623423" இலிருந்து மீள்விக்கப்பட்டது