பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நினைவு அலைகள்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, வேறு சாதி அதாவது கீழான சாதி என்று கருதப்பட்ட வீடுகளில் உணவருந்தத் தயங்காதவர்.

கட்டையாம்பந்தல் சபாபதி வீட்டில், வாலாஜாபாத் கோபால் நாயுடு வீட்டில், மேலமையூர் வேதாசலம் வீட்டில் பேதம் பாராட்டாமல் உணவு சாப்பிட்ட முற்போக்காளர்.

குத்துாசி குருசாமியார், குஞ்சிதம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டபோது பாராட்டி, மகிழ்ந்தவர்.

திரு. அ. ச. ஞானசம்பந்தம் வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

பண்டிட் ஆனந்தம், எங்களவர் இராதாபாயைத் திருமணம் செய்து கொண்டதைப் பாராட்டியவர்.

இளையனார் வேலூர் கோவிந்தசாமியின் கலப்புத் திருமணத்தைப் போற்றியவர். தந்தை பெரியாரைப் பின்பற்றிய அவர், கோயிலுக்குச் சென்று வழிபடுவதையும் விட்டுவிட்டவர்.

இவ்வளவு தீவிரமானவர், என் திருமணம் பற்றி மட்டும் கடும் சினம் கொண்டது ஏன்?

அவ்வளவு கடும் சினத்திற்கு இடையிலேயும் திடீரென வீடேறிச் சென்ற என்னை விரட்டி அடிக்கவில்லை; என் முகத்தில் விழிப்பதில்லை என்று எழுந்து போய்விடவில்லை.

குத்து சி குருசாமியார் உறவினர்கள் இரண்டொருவர் அவரை வெளியே வைத்து உணவு இட்டதைப்போல், என்னை என் தந்தை ஒதுக்கிவைத்து இழிவு படுத்தவில்லை.

வீடு தேடி வந்த என்னை மன்னித்துப் பரிவுடன் விசாரித்தது, பண்பாட்டின் சிறப்பு அல்லவா?

சோகத்தின் ஊடே, தேனிர்க் கடை கூட இல்லாத, சிற்றுறுக்கு வண்டி ஒட்டி வந்தவர், பட்டினியாகப் போகக் கூடாது என்ற எண்ணம் பளிச்சிட்டு, சாப்பிட்டுவிட்டு போகச் சொல்’ என்று ஆணையிட்டது, அவருடைய மனிதத் தன்மையின் வெளிப்பாடு அல்லவா!

வந்தவரை வரவேற்கும் நாகரிகம், மன்னிக்கும் இயல்பு, விருந்தோம்பும் பண்பு, இவ்வளவோடு, அக்கம் பக்கத்தாருக்கு, முரட்டு முற்போக்காளராகக் காட்சியளித்த என் தந்தை, ஏன் நான் கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக என்மேல் அளவிற்கு மீறிய வெகுளி கொண்டார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/56&oldid=623425" இலிருந்து மீள்விக்கப்பட்டது