பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நினைவு அலைகள்

குளத்தில் மிதக்கும் தெப்பம் எத்தனை முறை சுற்றினாலும் தானாக, அதனால் வெளி ஏறமுடியாது.

சாதிக் குட்டையில் சிக்கியுள்ளதனி இந்தியன், தானாக, அதிலிருந்து வெளியேறி, முழு மனித உணர்வோடு, தன்மையோடு, பண்போடு, வாழமுடியாது என்று எனக்குப் பட்டது.

அதற்கென, வீறுடன் செயல்படும் நாடு தழுவிய பேரியக்கம் தேவை என்ற கருத்து மின்னிற்று.

அத்தகைய பேரியக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார், நீதிக்கட்சி சுமையைத் துாக்கிப்போட்டுக் கொள்ளாமல் இருந்தால், கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னே நிற்க வேண்டிய நெருக்கடி தலைமேல் விழாமல் இருந்தால், சாதிக்கலைப்பு, மேலும் மேலும் பெருகி விரைந்து இருக்குமோ என்று ஏங்கினேன்.

வேறு சாதியில் பெண் எடுத்துக் கொண்டேன் என்பதைவிட, தன்னை மதிக்கவில்லை என்ற உணர்வால் என் தந்தை என் மேல் அளவிற்கு மீறிய வெகுளி கொண்டாரோ?

தன் முற்போக்கு நிலைக்குப் பழுது வரும் அளவு வெகு ள வேண்டுமா? இப்படியும் எண்ணினேன்.

மறுவினாடி, இந்த முனைப்புதானே இந்தியனிடம் மேலோங்கி வரும் இயல்பு என்ற நினைப்பு மின்னிற்று.

மருமகன் பிருதிவிராசன் தன்னைப் பொருட்படுத்தவில்லை என்ற சினத்தில், மன்னர் ஜெயசந்திரன், மகள் விதவையாகவும் நாடு

அன்னியனுக்கு அடிமைப்படவும் உதவியது, நினைவில் பளிச்சிட்டு மின்னியது.

மன்னர் என்ன? தலைவர்கள் நிலையும் அதுவே. மக்கள் தேடிக் கொள்ளும் கேடுகளும், அதே ஊற்றில் இருந்து பொங்கி வருபவைகளே.

இப்படிச் சுழன்ற சிந்தனை, பொருட்படுத்தாதவர்களை, பொருட்படுத்தாமல் ஒதுக்கிவிட்டு, ஆக்க முயற்சியில் மூழ்கி விட, தமிழர்கள் கற்றுக்கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

‘எத்தனை சாதனைகளைப் புரிந்து மகிழக்கூடும்?” - என்ற கேள்விகளை எழுப்பிற்று. அடிக்கடி, நொடிக்குநொடி, பொருட்படுத்தாதவர்களோடு, கணக்கு தீர்த்துக்கொள்வதில் தமிழர் வீணாகிற அளவு, பிற மக்கள் பாழாகிறார்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/58&oldid=623427" இலிருந்து மீள்விக்கப்பட்டது