பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i yo

அவர்கள் விதிமுறை களாகக் கொண்டு தங்கள் காலத்தில் சாதனை நிகழ்த்திக் காட்டினார்கள்.

காலம் காலமாகத் தமிழகத்தில் இருந்துவரும் நல்ல நெறிமுறை களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்கள் மிகச்சிலரே. அதனால்தான் மிகச்சிலரே சாதனை படைக்கும் நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள். தியாகத்திற்குச் சிறந்த சான்றாகக் காமராஜரைவிட வேறு ஒருவரைக் காட்ட முடியுமா? தங்களுக்காக வாழ்வை மட்டுமா, பதவியை மட்டுமா, எதையும் தியாகம் செய்ய ஒரு மனிதர் தயாராக இருக்கிறார்’ என்று இந்தியர் அனைவரும் எண்ணினர் தமிழ் மக்கள் அவ்வாறு எண்ணிய காலம்வரை - தமிழ் நாட்டில் சமுதாயப் புரட்சி நடந்தது! கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட்டது!

நெ.து.க. அவர்கள் வடித்துள்ள நினைவு அலைகளை உழைத்தபின் புலம்பல் எனக் குறைத்து மதிப்பிடவேண்டாம்! உழைத்த காலத்தில் தமக்கிருந்த ஆதரவுகளையும் எதிர்ப்புகளையும் பாராட்டுதல்களையும் கடந்து, சாதனை படைத்த தமது பட்டறிவைப் பிறர் அறியவேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவாகக் கொள்ள வேண்டும்! இனி உருவாகப் போகின்ற சமுதாயத்தின் இளந் தலைமுறைக்கு நல்ல வழி காட்டுதலாக அமையவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் ஏற்றப்பட்ட சிந்தனைச் சுடராகக் கொள்ள வேண்டும்! அந்தச் சுடர், எதிர் நிற்கும் நீண்ட பாதையில் ஒளிவீசி, நடக்க வேண்டிய நல்ல நெறியைக் காட்ட உதவும்! நல்லோர் தம் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அறிந்துகொள்வது தனிமனிதனுக்கு மட்டும் அன்று, சமுதாயத்திற்கே வழிகாட்டும் ஒளி விளக்காக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

நம் முன்னோர்களின் அனுபவத்தையும் அவர்கள் கூறும் அறிவுரைகளையும் படிக்கும்போது மனத்தில் ஒருவகை உத்வேகமும் ஊக்கமும் பிறக்கும். அது வருங் காலத்தில் சமுதாயத்திற்கு உழைக்கும் சான்றோர் சிலரை உருவாக்கும். ஒருவகை அர்ப்பணிப்பு வாழ்க்கை வாழ்ந்த நெ.து. சு. அவர்கள் தம் வாழ்வியல் பணி அனுபவங்களைத் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் நலன் கருதியே சுயசரிதையாக எழுதிப் பதிவு செய்துள்ளார். பொருளிட்டித் தம் வாரிசுகளுக்குச் சொத்து சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இல்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம். தம் பதிவு, எதிர் வரும் 1.பத்தில் தமிழ்ச் சமுதாயத்தின் கல்வித் துறை வளர்ச்சிக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவலாம் என்கிற நோக்கத்தில்தான் எங்கள் பதிப்பகமும் அதை வெளிக் கொண்டு வரும் பெரு முயற்சியில் ாடுபட்டுள்ளதைக் கட்டிக்காட்ட விரும்புகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/6&oldid=623429" இலிருந்து மீள்விக்கப்பட்டது