பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நினைவு அலைகள்

எனவே, அக்டோபர் 31ஆம் நாள் மாலை அங்குச் சேர்ந்து, அடுத்த நாள் அலுவலில் சேரத் திட்டமிட்டேன்.

வட விசாகப்பட்டின மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இருந்த தலைமை எழுத்தர் பெயர், கோவையில் இருந்தவர்களுக்குத் தெரியவில்லை.

எனவே, பெயர் குறிப்பிடாமல், பதவியை மட்டும் குறிப்பிட்டு, அலுவலகத் தலைமை எழுத்தருக்குக் கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

நானும் என் மனைவியும் சென்னையில் இருந்து அக்டோபர் 30ஆம் நாள் புறப்பட்டுக் கல்கத்தா மெயிலில் ஆமதால வலசாவிற்கு அடுத்தநாள் மாலை வருவதாக எழுதினேன். புகைவண்டி நிலையத்தில் இருந்து நகரத்திற்கு அழைத்துப்போக, பேருந்தில் இடம் ஏற்பாடு செய்து வைக்கக் கூறினேன்.

சீகாகுளத்தில் வீடு பிடிக்கும் வரை, தற்காலிகத் தங்கலுக்கு இடம் ஏற்பாடு செய்யவும் எழுதியிருந்தேன். இருவருக்கும் மரக்கறி ஒட்டலில் இருந்து சாப்பாடு கொண்டுவர ஏற்பாடு செய்யவும் எழுதியிருந்தேன்.

அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுத, சென்னையில், என் மாமனார் முகவரியைக் கொடுத்திருந்தேன்.

பெட்டி பேழைகளைக் கட்டினோம். வழியனுப்பு விருந்துகளை உண்டோம்.

பல நண்பர்களுடைய வாழ்த்துதல்களோடு திரு. சி. சுப்பிரமணியத் திடம் விடைபெற்றுக் கொண்டு உரிய நாளன்று நீலகிரி விரைவு வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டோம்.

6. கோடா கிருஷ்ணமூர்த்தி பந்துலுவின் கோபம்

சீகாகுளம் சேர்ந்தேன்

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து நாற்பத்து இரண்டாம் ஆண்டு, அக்டோபர் முப்பதாம் நாள், நானும் காந்தம்மாவும் கல்கத்தா மெயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/60&oldid=623430" இலிருந்து மீள்விக்கப்பட்டது