பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நினைவு அலைகள்

‘'சாதி அடிப்படையையே அடியோடு மாற்றியாக வேண்டும் அதற்குப் பெருமுயற்சி தேவை.

‘பலருடைய முயற்சி தேவை: காலம், இடம், அறிந்து முனையும் இடைவிடாத முயற்சி தேவை.

‘இந்தத் தனி மனிதரின் புண்படுத்தும் நடவடிக்கைக்கு இவர் மே. வெறுப்பு கொள்வது, சிறு பிள்ளைத்தனம்; சாதி முறையின் மேல் கசப்பு கொள்வது முதிர்ந்த நிலை; அறிவுடைய நிலை. பிந்தியதைப் பின்பற்றுவோம்.

‘ஆதிதிராவிடர்களை, பிற கீழ்ப் பிரிவினர்களை உயர்த்துவோம் மற்றவர்களுக்கு ஈடாக உயர்த்துவோம்.

‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின். ‘வேரூன்றி, வலிமை பெற்று பள்ளத்தில், இருப்போாை. துக்கிவிடும் நிலை வரும் வரை பொறுத்திருப்போம்.

‘குடி செய்வார், மானம் கருதக் கூடாதே.

‘பதவியை, புதிய சமத்துவக் குடியை உருவாக்கும் வாய்ப்பாக கருதியுள்ள நான், நொய்க்கஞ்சியாக, இருத்தலாகாது.

‘வந்த அவமானத்தைப் பொருட்படுத்தாமல், அன்புடனும் பண்புடனும் இயங்க முடிந்தால், பலருடைய அவமானத்தைப் போக்க நான் பயன்படக்கூடும்.’

நொடியில், உச்சி வானத்திலிருந்து தொடுவானம் வரை வெட்டும் மின்னல் கீற்றுகளையொப்ப, என் சிந்தனை பாய்ந்தோடிற்று. குரு தணியவும், மேலும் தெளிவு பிறந்தது. அது என்ன?

திரு கோடா, கிருஷ்ணமூர்த்தி, சென்னை மாகாண கல்வித துறையின், கீழ்நிலையில் அலுவலைத் தொடங்கியவர்.

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் சாதாரண பணிகளில் தேங்கிக் கிடந்த பிறகே, அய்ம்பது வயதை நெருங்கும் போது மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றார்.

விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஒரு கல்வி அலுவலர் போதாதென்னும் அளவிற்குக் கல்வி நிலையங்கள் பெருகியிருந்தன

அதனால் வட விசாகப்பட்டினம் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி,

புதிதாக உண்டாக்கப்பட்டது.

பதவி உயர்வுக்கு காத்திருந்தோரில் முதல் இடத்தில் இருந்ததால், கோடா கிருஷ்ணமூர்த்தி பந்துலு, மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/66&oldid=623436" இலிருந்து மீள்விக்கப்பட்டது