பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நினைவு அலைகள்

அவரும் ஒத்துழைத்தார். பதவி இறக்கம் பெற்றவரின் மனப்புண் ஒரளவு ஆறிற்று.

இதற்கிடையில், நான் குடியிருக்க வீடு தேடும் படலம் தொடங்கிற்று.

சிறிய நகரமாகிய சீகாகுளத்தில் வாடகை வீடுகள் சிலவே. மாவட் அலுவலர் குடியிருப்பதற்கு வசதியான வீடுகள் அரிதினும் அரியன.

யாதவத் தெருவில், தாசில்தார் குடிஇருந்த வீடொன்று காலியாக இருந்தது.

நான், ஆதிதிராவிடர் என்று எண்ணிய அவ் வீட்டுக்காரர் என்னைக் குடிஇருக்க விடுவாரா? மறுத்துவிட்டார்.

நான், மரக்கறி உணவுப் பழக்கமுடையவன் என்றும் பொடின் செய்தி யும் இரண்டொரு நாள்களில் காற்றில் பறந்தது வீட்டுக்காரருக்குத் துணிச்சல் வந்தது. எனக்கு அவ் வீடு கிடைத்தது.

வீடு, பெரியதும் அல்ல; சிறியதும் அல்ல; இருவர் தேவைக்கு மேல் பெரியது. அக்கம் பக்கத்தார் அடக்கமானவர்கள். பண்பானவர்கள் ஒரளவு பாதுகாப்பான கட்டடமும் கூட,

வீடு கிடைத்தும் வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை, சில நாள்கள் தொல்லைப்பட்ட பிறகு, சலவைத் தொழிலாளர் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருத்தி கிடைத்தாள். அவளுடைய உதவியோடு என் மனைவி, வீட்டை நடத்தினார்.

நான், அலுவலில் மூழ்கினேன். அந்த மாவட்டத்தில், தனியார் தொடக்கப் பள்ளிகள் ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருந்தன. மாவட்ட ஆட்சிக் குழுவின் சார்பில் நடந்த தொடக்கப் பள்ளிகள் பல நூறு ஆகும்.

ஆண்டுக்கு ஒரு முறை மான்யம்

அக் காலத்தில் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றைக்கு இருப்பதைப் போன்று திங்கள் தோறும் அரசின் நிதி உதவி வழங்கவில்லை. நிதி ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டது.

எட்டாம் வகுப்புத் தகுதியும் பயிற்சியும் பெற்றவருக்கு ஆண்டுக்கு நூற்று நாற்பத்து நான்கு ரூபாய்கள் மான்யம்; பள்ளி இறுதித் தகுதியும் பயிற்சியும் பெற்றவருக்கு இருநூறு ரூபாய்கள் ஆண்டு ஊதியம்.

இவற்றிலும் ஒரளவு பிடித்துக் கொண்டு, மிச்சத்தைக்

கொடுக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/68&oldid=623438" இலிருந்து மீள்விக்கப்பட்டது