பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கல்வித்துறையில் நெ.து.சு. அவர்கள் சாதிக்காதது எதுவும் இல்லை எனக் கூறலாம். ஆயினும், கல்வித் துறையின் உயர்பதவியான துணைவேந்தர் பொறுப்பிலிருந்தபோதும், சில ஒழுக்க நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து - முன்னுக்குவர நினைக்கும் மாணவனைப்போலவே செயல்பட்டுள்ளார். அந்த நிலையில் தாம் உச்சத்தை எட்டி விட்டதாக எண்ணி வானில் பறக்காமல், தரையில் பயணம் செய்யும் சாதாரண மனிதனைப்போலப் பணிவோடு, அடக்கமாகச் செயல்பட்டது சாதனையைப் பல மடங்காகப் பெருக்கியது. தாம் மேற்கொண்ட ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின்போதும், தாம் பணியாற்றிய துறையோடு தொடர்புடைய, துறை வளர்ச்சிக்குத் தேவையான ஏதாவது கிடைக்குமா எனத் தேடிக் கொண்டுவந்தார். அவ்வாறு பெற்றுவந்த புதுமைகளை வளர்ச்சிக்கு உகந்த வகையில் செயல்முறைப்படுத்திக் கல்வித்துறை ஏற்றம் பெற வழிவகுத்தார்.

தம் செயல்பாட்டினால் விளைந்த சாதனைகளை தம் ஒருவரின் தனிப்பட்ட சாதனையாக அவர் காட்டிக் கொள்ளவில்லை. தாம் தலைமை ஏற்றிருந்த துறையில் பணியாற்றிய அனைவரது கூட்டு முயற்சியின் சாதனையாகவே - தன்னடக்கத்துடன் சுட்டிக் காட்டிக் கொண்டார். எந்தச் சாதனையும் பிறர் துணை இல்லாமல் முழுமை பெற முடியாது என்பதை உணர்த்தினார். அவருடைய தன்னடக்கம், சுய நலத்தை அழித்தது எனலாம்.

நெ.து. சு. அவர்கள் தகுதிக்கு மீறிய வசதியை விரும்பாதவர்; தகுதிக்கு மிஞ்சிய சலுகையை எதிர்பார்க்காதவர் தாம் மதிக்கப்படுவதைப் போல - போற்றப் படுவதை போல அடுத்தவரும் மதிக்கப்பட வேண்டும், போற்றப்படவேண்டும் என்பது ஆரோக்கிய மான ஆசை இந்த ஆசை சமுதாயத்தில் வளர்க்கப்பட வேண்டும்.

நெ.து. சு. அவர்கள் சென்ற தலைமுறையில் வாழ்ந்தவர்! நமக்கெல்லாம் நல்வழிகாட்டியவர். அவர் பதிவு செய்து விட்டுச் சென்றுள்ள நினைவு அலைகள், எதிர்வரும் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகும்.

இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி இளைய தலைமுறைக்கு மட்டுமே உண்டு அதிலும் குறிப்பாக, மாணவ சமுதாயத்திற்கு மட்டுமே உண்டு காலம் தவறாமை’ சாதனை படைப்பதற்கு முதல்படி நேரமில்லை என்பது பெரும்பாலும் நமது சோம்பேறித் தனத்தை மறைப்பதற்கு மிகமிகச் சாதாரணமாக நாம் கூறும் காரணம் என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். சமுதாயத்தைச் சீரழிவிலிருந்து பாதுகாக்கும் முயற்சியினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/7&oldid=623440" இலிருந்து மீள்விக்கப்பட்டது