பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நினைவு அலைகள்

வலைவீச்சு

காவல் துறைக்கு வலை வீச முடியாது போகவே, கல்வித் துறைக்கு வலைவீச முயற்சி நடந்தது.

எதற்கோ வந்ததுபோல், அப் பக்க பெரியவர் ஒருவர் என்னைக் காண வந்தார். பேச்சு வாக்கில், மேற் கூறிய நிகழ்ச்சியை நினைவு படுத்தினார். -

அப்படி ஆய்வாளரை வழிமறித்து அடித்ததைப் பற்றிய கருத்து எதையும் கூறாமல் பேசினார்.

அத் தகராறு, பார்ப்பன ஆய்வாளருக்கும் பார்ப்பனர் அல்லாத நிர்வாகிக்கும் இடையே உள்ள போராட்டம், என்று சாயம் பூசப் பார்த்தார்.

நான் மிகப் பொறுமையாகக் காதுகளைக் கொடுத்துக் கேட்டேன். அவ்வளவோடு நின்றுவிட்டேன்.

அவர் எதிர்பார்த்தபடி, பார்ப்பனர் அல்லாத நிர்வாகிக்குச் சார்பாக இல்லை.

காவலரின் பொறுப்புணர்ச்சி

இப்படி இருக்கையில் பல நாள்களுக்குப்பின், ஒரு நாள், நான் சீகாகுளத்தில் இருந்து பாலகொண்டா என்ற ஊருக்குப் பேருந்தில் சென்றேன்.

வழியில் ஆமதாலவலசா காவல் நிலையத்தில் பேருந்து நின்றது. ஒட்டுநரும் நடத்துநரும் காவல் நிலையத்திற்குள் கையெழுத்து இடச் சென்றார்கள்.

நான் பேருந்து வண்டியில் காத்திருந்தேன்.

அவ் வேளை தலைமைக்காவலர், வெளியே வந்தார்; என்னிடம் நெருங்கினார். காவல்துறை முறைப்படி வணக்கம் செய்தார்; சில விவரங்களைக் கூறினார்.

‘'நான் இக் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர். ‘திரு. சத்யநாராயண பந்துலுவை ஒரு நிர்வாகி அடித்த அன்று, நான் காவல் நிலையப் பொறுப்பில் இருந்தேன்.

‘அவர் புகாரை முறைப்படி பதிந்து கொண்டேன். உடனடியாக நடவடிக்கையும் எடுத்தேன். வழக்குப்போட ஏற்பாடுகளும் செய்தேன். தண்டனை வாங்கித் தருவது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/74&oldid=623445" இலிருந்து மீள்விக்கப்பட்டது