பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 59

‘நாங்கள் சத்திய சீலர்கள் அல்லர். நான், கொடுப்பவர்களிடம் கைநீட்டி வாங்காதவனும் அல்லன்.

‘ஆனால், இவ்வழக்கில் வளைந்து கொடுக்க மாட்டேன். ஏன் என்று, ‘தெய்வம் போன்ற உங்களிடம் சொல்லாமல் ஒளிப்பானேன்? ‘இப்போது பள்ளிக்கூட ஆய்வாளரை அடித்ததைப் பற்றிப் பாாாமுகமாக இருந்துவிட்டால், கண்டிப்பான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டால், பொது மக்களுக்குக் குளிர்விட்டு விடும்; அச்சம் _ன்று விடும்.

‘அப்புறம் அவர்கள் காவல் துறை அலுவலர்களிடம் கை வரிசையைக் காட்டுவதற்கு நாள் ஆகாது.

‘அரசு அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்புச் சரிய, நான்துணையாக இருக்கக்கூடாது. அதனால்தான், வரும் அதிக வருவாயை இழப்பதைப் பொருட்படுத்தாது, உடனடியாக இயங்கினேன். தங்களுக்குத் தண்டனிட்டேன்.

‘பிழையிருந்தால் பொறுத்தருள்க’ என்று மீண்டும் ‘சல்யூட்’ _டித்தார்.

சொற்ப ஊதியம் பெற்ற அந்தத் தலைமைக் காவலருக்கு இருந்த ‘குழு உணர்ச்சி என்னைப் பரவசப்படுத்தியது.

அரசு ஊழியருக்குப் பாதுகாப்பு

பல கட்டுகளுக்கிடையே பணிபுரியும் அரசு ஊழியர்களைக் கை விடக்கூடாது என்று தோன்றிற்று.

அலுவலர்களைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்ட வேளைகளிலும், அவர்களைக் காட்டிக்கொடுக்காமல், அலுவலர் அணிக்கு அவமானம் நேரிடாத வகையில் திருத்துவதே முறை என்று எனக்குத் தோன்றியது.

அப்படியே நடந்து வந்தேன். வெற்றியும் பெற்றேன் என்று சொல்லலாம்.

என்னுடைய நீண்ட அலுவல் காலத்தில் எவரையும் காவல் துறை புலன் விசாரணை என்கிற உளைச்சேற்றில் தள்ளி, சித்திர வதை செய்யாமலும், வேலை நீக்கம் போன்ற தண்டனைகளைக் கொடுக்காமலும் அரும் பணியாற்ற அலுவலர்களைத் தட்டிக் கொடுப்பதில் வெற்றி பெற்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/75&oldid=623446" இலிருந்து மீள்விக்கப்பட்டது