பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நினைவு அலைகள்

விரைந்துபோட நேர்ந்ததால், என் கையெழுத்து, படிக்க இயலாத அளவு அடியோடு மாறிவிட்டது.

இப்போதைய என் ஆங்கிலக் கையெழுத்தில் என்.டி.எஸ். என்ற மூன்று எழுத்துகளே தெளிவாக இருக்கும். மற்றவை ஒரே கிறுக்கல்.

சீகாகுளம் போவதற்கு முன்பு, என் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். அதைப்பற்றிப் பேசிப் பயன் என்ன?

நான் சீகாகுளத்தில் அலுவல் பார்த்த போதுதான், பஞ்சப்படி கொடுக்கும் முறை முதன் முதலாக, நடைமுறைக்கு வந்தது. முதல் ஆணை, நான்கு திங்கள் முன் தேதியிட்டு வந்தது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வந்த பஞ்சப்படி மூன்று ரூபாய்களாகும். நான்கு திங்கள் படி. ரூபாய் பன்னிரண்டையும் விரைந்து கொடுத்தேன்.

புதிய சேமிப்புத் திட்டம் புகுந்தது

அநேகமாக அதே நேரத்தில் பாதுகாப்பு சேமிப்பு நிதி என்ற பெயரில், அஞ்சல் அலுவலகங்களில், புதிய சேமிப்புத் திட்டம் தொடங்கப் பட்டது.

--

சாதாரண அஞ்சல் சேமிப்பிற்கு வட்டி, நூற்றுக்கு மூன்று விழுக்காடு, பாதுகாப்பு சேமிப்புக்கு நூற்றுக்கு மூன்றரை வட்டி.

எதிர்பாராது கிடைத்த, பன்னிரண்டு ரூபாய்களை முழுமையாகவோ, பகுதியாகவோ, பாதுகாப்புச் சேமிப்பில் வைக்கும்படி, வேண்டும் சுற்றறிக்கை ஒன்றை நான் அனுப்பினேன்.

அதிகப் பழக்கமில்லாத சீகாகுளம் ஆசிரியர் படை கொடுத்த ஒத்துழைப்பு போற்றத்தக்கதாம்.

“பாதுகாப்புச் சேமிப்பில் சேராதவர்கள் நூற்றுக்கு ஒரிருவரே. மற்றவர்கள் சேமிப்பில் ஈடுபட்டார்கள். திங்கள் தோறும் தவறாது சேமித்தார்கள்.

உணவுத் தட்டுப்பாடு

பிரிட்டானியர் சேர்ந்திருக்கும் சோவியத் அமெரிக்க கூட்டணியின் வெற்றியே இந்தியாவின், உலகத்தின் உரிமைக்கும், எதிர்காலத்திற்கும் நல்லது என்பது, சாதாரண மக்களுக்கும் அன்று மிகத் தெளிவாகப் புரிந்தது.

போர் மூள்வது, உணவுத் தட்டுப் பாட்டிற்குக் காரணமாகும். அத் தட்டுப்பாடு இந்தியாவை விட்டதா? இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/78&oldid=623449" இலிருந்து மீள்விக்கப்பட்டது