பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருெ து. சுந்தரவடிவேலு 63

மேற்கு வங்கத்தை வாட்டி வதைத்தது. இலட்சக்கணக்கான வங்காளியர், பட்டினிக் கொடுமையால், காக்கை குருவிகளைப் போல் பாண்டு கிடந்தார்கள்.

எப்படியாவது, எங்காவது உணவு உற்பததியைப் பெருக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது; வழியொன்று பிறந்தது: ஆனையொன்று வெளியானது. அது என்ன?

அரசின் அலுவலகங்களின் வளாகங்களில் காய்கறிகளைப் பயிரிட்டுக் கொள்ளலாம்.

எவர் பயிரிடலாம்? அலுவலகக் காவலர்கள், ஊழியர்கள் | பிரிட்டுக் கொள்ளலாம். அதற்குப் பொது அனுமதி கொடுக்கப்பட்டது. பயிரிட்ட பண்டங்களை என்ன செய்வது?

அதில் ஈடுபட்ட ஊழியர்கள், தங்களுக்குள் நியாயமானபடி, பங்கிட்டு எடுத்துக்கொள்ள, உரிமை உண்டு.

பொது நிதியிலிருந்து செலவு செய்யாது, ஊழியர்களின் உழைப்பால் பத்தியாகும் காய்கறிகள் அவர்களுக்கே உரியது என்ற ஆணை பெரிய துண்டுகோலாக அமைந்தது.

அலுவலக வளாகங்களில் பருவ காலங்களில், காய்கறிகள் விளைந்தன.

கோகுளம் மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் காய்கறித் தோட்டம் உருவாயிற்று. பதின்மூன்று வகைக் காய்கறிகள் பயிராயின. நான்கு |ங்கள் வரை ஊழியர்களுக்கு, காய்கறிப் பஞ்சமில்லை.

பல பள்ளிகளிலும் இத்தகைய விளைவைக் கண்டோம். ஆனால் அதை, தன்னாட்சி இந்தியாவில் கைவிட்டு விட்டோம். பகல் உணவு போடும் பள்ளிகளோடு தோட்டங்களை இணைத்து, ()யற்கைப் பாடக் கருவியாகவும் பச்சைக் காய்கறி தந்து வளர்க்கும் உபாயமாக யும் பள்ளிக்கூடத் தோட்டம் வளர்ப்பதைக் கருத்தில் கொண்டு இருந்தோம். அதுவும் ‘கருச்சிதை வாக முடிந்தது.

9. மக்கள் நம்பிக்கை குவிந்தது

உலகப்போர்

பகல் இரவு மாறி மாறி வரும்; வேலை அடுத்து ஒய்வு. அது இயற்கை. இன்பம் துன்பம் பின்னிப் பின்னிவரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/79&oldid=623450" இலிருந்து மீள்விக்கப்பட்டது