பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

νί

மேற்கொள்ளும் வழிகாட்டிகள் அவ்வப்போது தோன்றுகிறார்கள். அவர்கள் விட்டுச் செல்லும் எச்சங்களை ஏற்று நடைபோட வேண்டும் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும். சமுதாயச் சீரழிவிற்கு அரசியல் வாதிகளும் அதிகாரிகளுமே காரணம்’ எனக் கூறிக் கொண்டிருப்பதில் மட்டும் நற்பயன் விளையாது. அத்தகைய இழிவாளர்கள் தோன்றாதிருக்க வழி என்ன என்று சிந்திக்க வேண்டும்.

நேர்மையும் எளிமையும் நிறைந்த வாழ்க்கையை மேற்கொண்டு மக்களுக்காக வாழ்ந்து, மக்களைத் கவர்ந்தவர்கள் விட்டுச் செல்லும் பதிவுகளைச் சமுதாயத்திற்கு வழிகாட்டும் நெறி நூல்களாகக் கொள்ள வேண்டும். அப்பதிவுகள் சமுதாயத்தில் உண்மை, எளிமை, உழைப்பு முதலான நற்பண்புகள் வளர வழிகாட்டும்.

இக் கருத்தினைச் சமுதாயத்திற்கு உணர்த்துவது நமது கடமையாகும். இக் கடமையை நிறைவேற்றும் பெருநோக்குடன், தமிழ்ச் சமுதாயம் பெருவிருப்போடு ஆதரித்து வரவேற்கும் என்ற நம்பிக்கையோடு இந்த நூலை எமது பதிப்பகத்தின் சார்பாக வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்த நூல் சிறப்பாக வெளிவருவதற்குத் துணையாக மெய்ப்பு பார்த்து உதவிய பேராசிரியர் வி. கணபதி, அவர்களுக்கும், சென்னை, கிறித்தவக் கல்லூரி மேனிலைப் பள்ளியிலிருந்து ஒய்வு பெற்றத் துணைத் தலைமை ஆசிரியர் திரு. பூ. ஜெயராமன் அவர்களுக்கும் இந்நூலை வெளியிடுவதற்குப் பெரிதும் துணை நின்ற நெ.து. சு. அவர்களின் குடும்பத்தினராகிய திரு. லெனின் திரு. துரைசாமி முதலானவர்களுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாந்தா பதிப்பகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/8&oldid=623451" இலிருந்து மீள்விக்கப்பட்டது