பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நினைவு அலைகள்

அதையொட்டி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவரும் ‘பாதுகாப்புப் பத்திரம் விற்கும் அலுவலராக மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கெஜட் பதிவு பெற்றவரையும் நியமிக்க வேண்டும்.

விசாகப்பட்டினம் ஆட்சித் தலைவர் என்னை சீகாகுளம் பகுதி விற்பனையாளர்களில் ஒருவராக நியமித்தார்.

அதற்கான இரசீதுக் கட்டுகளை எனக்கு அனுப்பி வைத்தார். பத்திரங்கள் பத்து, அய்ம்பது, நூறு, ஆயிரம் ரூபாய் அளவையில் அச்சடிக்கப்பட்டு இருந்தன.

சேமிப்பாளர், கட்டுகிற தொகையைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு இரசீது கொடுக்கவேண்டும்.

பணத்தை முடிந்தால், நாள்தோறும், அரசின் கருவூலத்தில் கட்டிவிடவேண்டும். முடியாதபோது, இரண்டொரு நாள்களுக்கு ஒருமுறையாவது கருவூலத்தில் செலுத்துதல் கடமை.

அவ்வப்போது, அந்த இரசீதுகளின் அடிக்கட்டையும் கருவூல இரசீதுகளையும் மாவட்ட ஆட்சியாளருக்கு அனுப்பிப் பத்திரங்களை வாங்கி, உரியவர்களிடம் கொடுக்க வேண்டும்.

சொந்தச் செலவில் பயணம்

நான், எந்த ஊருக்குச் சென்று தங்கினாலும் எல்லாச்

செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்வேன்.

ஆசிரியர்களோ, ஆய்வாளரோ செலவு செய்ய விடமாட்டேன்.

இந்தச் செய்தி, நானா பக்கங்களிலும் பரவிவிட்டது. எனவே, பொது மக்கள், என்பால் நம்பிக்கை கொண்டனர்.

என்னையே நாடினர்

“பாதுகாப்புப் பத்திர விற்பனையாளராக, நான் நியமிக்கப் பட்ட சில நாள்களில், நாட்டுப்புறத்தார் பலர், என்னை நாடி அணுகி வந்தனர்.

அவர்களில் சிலர் அய்யாயிரம், பத்தாயிரம், ரூபாய்களைக் கொண்டு வந்து, என்னிடம் கொடுத்து, பத்திரங்களுக்காகப் பதிந்து கொண்டனர்.

பெருந் தொகைகள் வந்த பொழுது அவற்றைப் பாதுகாப்பாக வைக்க, வீட்டில் இடமில்லை.

அலுவலக இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டுவேன்.

அதற்கு உதவியாகும் பொருட்டு, அலுவலக நேரத்திற்கு முன்பே, அங்குச் செல்லும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/82&oldid=623454" இலிருந்து மீள்விக்கப்பட்டது