பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நினைவு -,-- )

மாவட்டத்திலுள்ள இலட்சக்கணக்கான குடியானவர்களில் சில நூறு பேர்கள், கல்வி அலுவலர் வழியாகப் பத்திரம் வாங்குவதைக் கூ , தாங்கிக் கொள்ள முடியாத அளவு அவா கொண்டு, அல்ல. பட்டார்கள். அந்தோ பரிதாபம்!

மாந்தர் இனத்தை ஆட்டிப் படைப்பது அறிவு அல்ல! உணர்ச்சி! :ய உணர்ச்சி என்பதை அன்று நான் விளங்கிக்கொண்டேன்.

பிந்திய நாற்பது ஆண்டுகளில் நான் தெரிந்து கொண்டது என்ன?

அழுக்காறால், அவாவால், துரோகத்தால், இனக்கொலையா. மொத்தத்தில் மாந்தர் இனம் எட்டவேண்டிய நிலையை எட்டால் பரிதவிக்கிறது.

இதில், மக்கள் இனத்தின் மூத்த பிரிவினராகிய தமிழரொடு எவரும் போட்டியிட இயலாது.

அவர்கள் தாழ்ந்தது, மீளமுடியாது மீண்டும் வீழ்வது, அழுக்காறாம். பேராசையால், வளர்த்தவர்களையே புறமுதுகில் குத்துவதால்; மூன்று காசுக்குத் தோழனை வெட்டும் புத்தியால்; சொன்ன சொ

தி ஆதிது “தி I_ _ Tது .

தமிழ்நாட்டில் இன்னும் ஆயிரம் பெரியார்கள் தோன்றி அளப்பரும் பாடுபட்டாலும், சாண் ஏற முழம் சறுக்கும் நிலையில் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் தமிழர்களைக் கண்டு பரிதாபப்பட்டுப்

பலன எனன?

10. அளவில்லாத ஆடம்பரச் செலவு

தெலுங்கு கற்றேன்

சீகாகுளத்தில் வேலை பார்க்கையில், தெலுங்கு மொழி கற்பதில் ஈடுபட்டேன். அதில் தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான், என் பதவி உறுதியாகும். என் தெலுங்கு ஆசிரியர் என் மனைவி காந்தம்மாளே.

தெலுங்கில் வாய்மொழித் தேர்வும் உண்டு. பேச்சுப் பழக்கம் ஏற்படுவதற்காக, ஊழியர்களோடு தொடர்ந்து தெலுங்கில் பேச முயன்றேன்.

‘அப்படியே என்று தமிழில் சொல்லுவதற்கு ஈடாக, ஊழியர்கள் ‘சித்தம்’ என்று பணிவாகக் கூறுவார்கள்.

என் அலுவலகத்தில் மூன்று, கடை நிலை ஊழியர்கள் பகை) புரிந்தார்கள். அவர்களில் ஒருவர் பெயர் ராஜாராவ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/86&oldid=623458" இலிருந்து மீள்விக்கப்பட்டது