பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நை து சlதரவடிவேலு 71

_வழியர் வீட்டில் பகட்டான விழா

மூரு நாள் காலை அவர் ஒரு தாம்பாளத்தில் தாம்பூலத்தை வைத்து அய்மேல் ஒர் உறையை வைத்து எடுத்துக் கொண்டு வந்தார்.

‘அம்மகாருனி, பிலுவண்டி பாபுகாரு என்று குழைவோடு பவண்டினார்.

‘அம்மாவை அழையுங்கள் என்று அதற்குப் பொருள். அதன் படி - மனைவியை அழைத்தேன். o

காந்தம்மா என் பக்கம் வந்து நின்றதும், தாம்பாளத்தை எங்கள் டிருவர் கைகளில் கொடுத்துவிட்டு, மின்னலின் விரைவில், எங்கள் காளிகளைத் தொட்டு, கண்ணில் ஒத்திக்கொண்டார்.

பொத்தானை அழுத்தியதும் வெளிச்சம் பளிச்சிடுவதுபோல, _i துள் சினம் பொங்கி வழிந்தது: கண்கள் சிவந்தன; நாடிகள் அடி தன.

‘முத்து ஒத்து இட்ல செயக்கூடது’ என்று பதற்றத்தோடு கூறினேன். அதற்குள், மலரடி தொட்டுக் கும்பிட்டு ஆகிவிட்டதே!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சினங்கொள்ள வைத்த அப் பழக்கம் சமுதாயத்தில் அடியோடு நிற்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவாவது குறைந்ததா? அந்தோ இல்லை.

பெரியாரின் தன்மான இயக்கம் வளர்த்த சமத்துவ உணர்ச்சியால் | lதப்பட்ட என்னைப் போன்ற இலட்சக் கணக்கானவர்கள் காலைத் தொட்டுக் கும்பிடுவதைவிட்டு வளர்ந்து வந்தோம்.

முப்பது ஆண்டு காலம் இத்தகைய நல்ல போக்கு வளர்ந்தது.

ஆனால் கொடுமை சென்ற இருபது ஆண்டுகளாக, இந்த இழிந்த போக்கு, செழுமையாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.

எவர் எவரை, எதற்கு வீழ்ந்து வணங்குவது என்ற வரையறை கூட, இல்லாது போய்விட்டது.

பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள்கூட நாடறிய, ஆயிரக்கணக்கானவர்கள் காண, பெரியவர்கள் காலில் வீழ்ந்து கும்பிடுவதே, விளம்பரப்படும் புதிய நாகரிகமாகிவிட்டது: வயிறு வளர்க்கும் வழியாகிவிட்டது.

சமயாச்சாரிகளைப் பின்பற்றுவோர் கூட காலில் வீழாமல் மரியாதை செய்யும் முறைக்கு மாறிய பிறகும், மற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு காலில் வீழ்ந்து வளரும்போது, நாம் பெரியாரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/87&oldid=623459" இலிருந்து மீள்விக்கப்பட்டது