பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நினைவு அலைகள்

‘பண்படுத்தப்பட்டவர்கள் என்று தற்பெருமை பேசிக்கொள்வதில் ஏதேனும் பொருள் உண்டா?

ராஜாராவ் அளித்த அழைப்பு தெலுங்கில் இருந்தது. காந்தம்மா அதைப் படித்துச் சொன்னார்.

அந்த அழைப்பு எதற்காக? காதுகுத்தும் விழாவிற்கு அழைப்பு. எவருக்குக் காது குத்து? இராஜாராவின் மூத்த மகனுக்குக் காதணி விழா நல்ல தாளில் அச்சிடப்பட்ட அழைப்பு சிந்தனையைத் துண்டிற்று. ‘என்ன ராஜாராவ்! இவ் விழாவிற்கு எவ்வளவு செலவு செய்யப்போகிறாய்?’ என்று கேட்டேன்.

அதை என் மனைவி மொழி பெயர்த்துச் சொன்னதும், ‘அய்ந்நூறு ரூபாய் என்று திட்டமிட்டுள்ளேன்: நூறு இருநூறு அதிகமானாலும் சமாளிக்க வேண்டியதே’ என்று பெருமிதத்தோடு கூறினார். r. ‘இதற்கு வேண்டிய பணத்தைச் சேமித்து வைத்திருக்கிறாயா? என்ற கேள்வியை எழுப்பினேன்.

தெலுங்கில் வந்த பதில் : ‘இல்லை எசமான் (பாபு) என் நாணயத்தில் நம்பிக்கையுடைய ஒரு நண்பர், கடனாகக் கொடுத்துள்ளார்’ என்பதாம்.

அன்று ராஜாராவின் ஊதியம், திங்களுக்குப் பதினைந்தே. மேல்வரும் படி உண்டா? கிடையாது.

ஏன்? அலுவலகம் தேடி வருவோர் வலியக் கொடுத்தாலும் ராஜாராவ் வாங்கிக் கொள்ள மாட்டார். அவ்வளவு மானி இராஜாராவ்! ‘'தேவுடு ஈய வல்ல, பாபு 1 என்று மறுத்துவிடுவார். அதாவது கடவுள் கொடுக்கணும் என்பார்.

சொற்ப ஊதியக்கராகிய ராஜாராவ், கையூட்டு வாங்குமளவு தாழாத ராஜாராவ், இவ்வளவு பெரிய கடனை எப்படி அடைப் பார் என்ற கவலை என் சிந்தனையில் மின்னிற்று.

‘ஏன்? இவ்வளவு செலவு செய்யனுமா? நூறு இரு நூற்றில் முடித்து விடக்கூடாதா? ‘ என்று கேட்டேன்.

சில மணித்துளிகளுக்கு முன்பு, எனக்கு வந்த அளவு வெகுளி, ராஜாராவுக்கு வந்தது.

முகம் சிவக்க, ‘எப்படிங்க, நான் இதற்கும் குறைவாகச் செலவு செய்வது? நான் கடைநிலை ஊழியனாக இருக்கலாம். ஆனால் ராஜ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/88&oldid=623460" இலிருந்து மீள்விக்கப்பட்டது