பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ri

கல்வி நெறிக்காவலர் அய்யா நெ.து.சு. அவர்கள் நினைவு.அ லைகள் இரண்டாம் பாகத்தின் முதற்பதிப்புக்கு அளித்த

முன்னுரை

பிறவி - மனிதப் பிறவி - பெறற்கரிய பேறாம். அப்பேற்றினை யான் பெற்றேன்; வழிவழி வந்த சான்றாண்மைச் சூழலில் வளர்ந்தேன். அது பெரும் ஆதாயம். அப்பேற்றினைப் பெற்றவர்கள் அனைவரும் கற்றவர்கள் அல்லர். திண்ணைப் பள்ளிக்கூடமும் இல்லாத சிற்றுாரில் பிறந்தாலும், இந்தியாவின் மூத்த பல்கலைக் கழகங்களில் ஒன்றாகிய சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறும் பேறு அரிய பேறே!

பிறவியும் கல்வியும் பெற்றவர்களுக்கும், வாய்ப்புகள் தாராளமாக வந்தடையும் என்று சொல்லி விட இயலாது. எனக்கோ வாய்ப்புகள் வந்தன. நாடாத போதும் தேடி வந்து தழுவிக் கொண்டன.

‘தமிழ் நாடு நாளிதழின் உதவி ஆசிரியர் பதவி முதல் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பதவி வரை பெற்ற ஒவ்வொரு பதவிக்கும் தேவைப்பட்டதகுதியிருந்தாலும், அவற்றை நான் பெற்றது என்னுடைய திறமையால் என்று பெருமை பேச இயலாது. எப்படியோ எய்தற்கரியன வந்து இயைந்தன. அவற்றில் என் பெருமை சிறிதளவே! காலத்தின் வளம், பெரியோர்களின் நேர்மை இவற்றின் பங்கே பெரிது.

நான் செய்தது ஒன்றுமில்லையா? உண்டு. அது என்ன? ஒவ்வொரு பதவியையும் வாய்ப்பாகப் பயன்படுத்தினேன். செய்தற்கரிய செய்யப் பாடுபட்டேன்.

‘என் கடன் பணி செய்து கிடத்தலே! இது நம் ஆன்றோரின் குறிக்கோள்; நாம் கற்றறிந்த உயர் நோக்கம். இவ் விலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்கிய காந்தியடிகளார், பெரியார், காமராசர், அண்ணா ஆகியோரின் பொதுத் தொண்டு என்னை ஊக்குவித்தது. ‘போற்றுவோர் போற்றட்டும்!துாற்றுவோர்துாற்றட்டும்! இன்று செய்ய வேண்டிய பணியை இன்றே செய்வோம்’ என்ற முனைப் பில்

உழைத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/9&oldid=623462" இலிருந்து மீள்விக்கப்பட்டது