பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சுந்தரவடிவேலு 75

ஆங்காங்கே உள்ளுர் ஆசிரியர்கள், பெண்கள் கூட்டங்களைத் நளியே ஏற்பாடு செய்வார்கள். நான், அக் கூட்டங்களில் கலைகாட்டுவது இல்லை.

பிாசாரகர் பணியில், என் மனைவி முன்னிறுத்தியவை வீடு தோறும் காய்கறித்தோட்டம் போடுதல், உணவுப் பொருள்கள் பாழாகாமல் பார்த்துக் கொள்ளல், பண்டங்களைப் பதுக்காமல் சமுதாயத்தைக் காத்தல், ‘என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று கிலி பிடித்து அலையாமை ஆகியவைகள்:

சந்தடிசாக்கில், பெண்களைப் படிக்க வைக்கும் படியும் கூட்டந்தோறும் சொல்லி வந்தார். பொதுக்கல்வி வளர்ச்சிக்கு அது துணையாயிற்று.

தொடக்கப் பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கை கூடியது.

அதனால் மாவட்ட கல்வித்துறைக்கு நல்லபெயர் வளர்ந்தது.

சுவையான நாடகம்

கோகுளத்திற்கு மேற்கே, தொலைவில் ராஜாம் என்ற பேரூர் உள்ளது. அவ் ஆர்க்குப் பேருந்தில் செல்ல வேண்டும். அப்படியே இருவரும் சென்றோம்.

என்ன கண்டோம் ஊர் நடுவில் மாவட்ட ஆணைக்குழுவின் தொடக்கப் பள்ளியொன்று இருந்தது.

அதற்கு நூற்று அய்ம்பது பேர்கள் அளவில் வந்து கொண்டிருந்தார்கள்.

அப் பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் இருந்தார்கள். எப்படிச் சமாளிப்பார்கள்? இப்படிக் கேட்கத் தோன்றுகிறதா? கேட்டு விடாதீர்கள், பலருடைய பகைக்கு ஆளாகவேண்டும்.

இன்றைக்கு ஆயிரக்கணக்கான பள்ளிகளில் போதிய ஆசிரியர்களில்லை. ஒவ்வொரு பிரிவுக்கும் அறுபது, எழுபது - ஏன் எண்பது மாணக்கர் இருப்பது பரவலான கோளாறு.

அதைப் பற்றிப் பேச்சு மூச்சுவிட்டால், பலருக்குப் பகையாகி விடுவோம்.

நம்மவர்கள் ஆளும்போதே இப்படி என்றால், அன்னியர் ஆண்டபோது, ‘நம்மாலே ஆவதொன்றும் இல்லை என்று கண்டும் காணாமல் பொறுத்துக் கொள்வதை யன்றி வேறு வழியில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/91&oldid=623464" இலிருந்து மீள்விக்கப்பட்டது