பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நினைவு அலைகள்

ஆனால் சுவையான நாடகம் உண்டு. என்ன நாடகம்? அந்தப் பள்ளியைத் தணிக்கை செய்யும் ஆய்வாளர், அந்தப் பள்ளிக்கு நான்கு ஆசிரியர் தேவை என்று குறித்துவிட்டுப் போவார். இட வசதியும் இரட்டிப்பாக வேண்டும் என்று எழுதத் தவற மாட்டார்.

அவை போதும், அவர் தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள.

மாவட்ட ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காதா? எடுக்க முயலும்.

அதில் வெற்றி பெறுமா? பெறாது. கண்ணாம்பூச்சி ஆட்டத்தைப் பாருங்கள்:

மாவட்ட ஆட்சிக்குழு, வரவு செலவுத் திட்டம் தயாரிக்கையில், எந்த எந்தப் பள்ளிக்கு எத்தனை ஆசிரியர்கள் கூடுதலாக வேண்டும் என்று கணக்குப் போடுவார்கள்.

தலைவருக்கோ, செல்வாக்குள்ள உறுப்பினருக்கோ பகையாளி இல்லாத ஊர்களின் தேவைகள் மட்டும் கணக்கில் சேரும். முத்தைய்யா முதலியாருக்கும் வேணுகோபால் முதலியாருக்கும் இடையே உள்ள பதவிப் போட்டி, அதனால் வளர்ந்த பகை, முந்தியவர் ஆட்சியில் பிந்தியவரின் ஊரிலுள்ள பள்ளியின் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கும்.

அப்படி பகையில்லாத ஊர்களின் தேவைகள் கணக்கில் சேர்ந்துவிட்டால், அப்படியே கிடைத்துவிடுமா?

கூடுதல் ஆசியர்களின் ஊதியமதிப்பீட்டைச் செலவுத் திட்டத்தில் சேர்த்து, ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெற்று, ஊராட்சிகளின் பெரும் ஆய்வாளருக்கு முறைப்படி அனுப்புவார்கள்.

அவர், தமது பரிந்துரையோடு அரசுக்கு அனுப்புவார்.

அரசு செயலக மட்டத்தில், அத்தனை ஆசிரியர்கள் தேவையா இல்லையா என்பதைப் பார்ப்பதற்குப் பதில், வரவுக்குமேல் செலவு அதிகம், என்பதையே முன்னிலைப்படுத்துவார்கள்.

துண்டுவிழும் தொகையை மான்யமாகக் கொடுக்க வசதி இல்லை’, என்று சொல்லி, கேட்டதில் வலிவான வெட்டு விழும். அப்போதும் குறிப்பிட்ட ஊருக்குக் கூடுதல் ஆசிரியர் கிடைத்து விடமாட்டார். ஏன்?

மாவட்ட ஆட்சிக்குழு அரசின் ஒப்புதல் கிடைத்த பின் எந்தெந்தப் பள்ளிகளுக்கு எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப் போகிறது என்று, மாவட்டக்கல்வி அலுவலருக்கு எழுதவேண்டும்.

அவருடைய ஒப்புதலைப் பெற்ற பிறகே, கூடுதலாக ஆசிரியர்களை

நியமிக்கலாம். மாவட்டக் கல்வி அலுவலராவது தம்மிடமுள்ள தகவல்களின் அடிப்படையில் முடிவுசெய்ய முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/92&oldid=623465" இலிருந்து மீள்விக்கப்பட்டது