பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவ டி வே 6al 77

-

முடியாது: கூடாது. அவர், பள்ளி ஆய்வாளருக்கு அனுப்பி அவருடைய கருத்துரையைக் கேட்கவேண்டும்.

ஏற்கெனவே, ஆண்டுத் தணிக்கையின் போது, ஆய்வாளர், கூடுதல் ஆசிரியர் ஒருவர் தேவை என்று எழுதியிருப்பார்.

அதை மாவட்ட அலுவலர் கோடிட்டு வற்புறுத்தி யிருப்பார். அவற்றை எடுத்துக் காட்டியும் அவரே ஒப்புதல் கொடுக்க மாட்டார்; கொடுக்கக்கூடாது.

வேலை நடக்காதிருப்பதற்காகவே பல படிகளை, நுழைவாய்களை, ஆங்கிலேய ஆட்சி உருவாக்கிற்று; நிர்வாகத்தைத் தேவைக்கு அதிகமான அளவு சிக்கல் உடையதாக்கிற்று. அந்த முறையை எங்கே கைவிட்டோம்!

ராஜாம் என்ற பேரூரைப் பொறுத்த மட்டில், ஆய்வாளர் கூடுதல் ஆசிரியர் போட இசையவில்லை.

எனவே, கல்வி அலுவலர் ஒப்பவில்லை ஏன்? இடவசதி போதாது; அதைப் பெருக்கிவிட்டு, கூடுதல் ஆசிரியருக்கு மனுச் செய்யவும். ஆகிற செயலா அது?

ஆண்டுக்கு முந்நூறு ரூபாய் செலவான ஆசிரியர் நியமனத் திட்டத்தையே கடுமையாக வெட்டிய அரசின் மேலோர்'கள் ஆசிரியருக்கு நாலாயிரம் ரூபாயில் இடவசதி செய்ய நிதி கொடுப்பார்களா?

11. ஆதி ஆந்திரர் பள்ளி - எழுப்பும் சிந்தனைகள்

ஆதி ஆந்திரர்கள் நடத்திய பள்ளி

நூற்று அய்ம்பது மாணவர்களுக்குக் கற்பிக்க இரண்டே இரண்டு ஆசிரியர்கள். எழுபது பேர்களுக்கு மட்டுமே போதுமான இடவசதி.

இவ் விரு சிக்கல்களும் அய்ந்தாறு ஆண்டுகளாக நீடித்தது. ஒன்றையும் தீர்க்க முடியவில்லை.

கூடுதல் ஆசிரியர்களைப் போட, இசைவு கேட்டால், இடமின்மையைக் காட்டினார்கள். இடப் பெருக்கத்திற்கு நிதி கேட்டால், மேலிடத்தார், கையை விரித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/93&oldid=623466" இலிருந்து மீள்விக்கப்பட்டது