பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நினைவு அலைகள்

இந்த அவலக் கதையை, ராஜாம் பள்ளியைப் பார்வை இட்டபோது, கேள்விப்பட்டேன்.

‘என்று தொலையும் இந்தத் தொல்லை என்று எனக்குள்ளே, பொரு மிக்கொண்டிருக்கையில், ஏழெட்டு ஆண்கள் மிகுந்த பணிவுடன் வந்து நின்றார்கள்.

பள்ளிக்கு வெளியே நின்றபடியே பெரிய கும்பிடு போட்டார்கள். அவர்கள் பள்ளிக்கு உள்ளே நுழைந்து வரவேண்டுமானால், பிள்ளைகளை மிதித்துக் கொண்டுதான் வரவேண்டும்.

எனவே, நானே வெளியே சென்று, அவர்கள் சொல்வதைக் கேட்டேன்.

‘நாங்கள் ஆதி ஆந்திரர்கள். எங்கள் குடியிருப்பு, ஊருக்குத் தொலைவில் இருக்கிறது. சிறு பிள்ளைகள், அங்கு இருந்து, இப் பள்ளிக்கு வந்து படிக்க இயலாது, எங்கள் குடியிருப்பிலேயே ஒரு தொடக்கப் பள்ளி வைக்க ஒப்புதல் தாருங்கள் என்று கோரும் மனுவை என்னிடம் நீட்டினார்கள்.

என் அருகில் நின்ற ஊர்ப் பள்ளித் தலைமை ஆசிரியரைப் பார்த்து, ‘ஊருக்கும் குடியிருப்பிற்கும் எவ்வளவு தொலைவு?’ என்று கேட்டேன்.

‘இரண்டு மைல் ‘ என்றார். ‘அங்கிருந்து இப் பள்ளிக்கு வரும் ஆதி ஆந்திரர்கள் எத்தனை பேர்?’ இது என்னுடைய அடுத்த கேள்வி.

‘ஒருவரு மில்லை’ என்பது தலைமை ஆசிரியரின் பதில். ‘எவ்வளவு காலமாக இந்த நிலை?’ என்று கேட்டேன். ‘எனக்குத் தெரிய, அய்ந்தாண்டுகளாக, இந்நிலை, பாபு’ என்றார். ‘ஆதி ஆந்திரர்கள் படிக்காத பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்பது தெரியுமா?’ என்று தலைமை ஆசிரியரை மடக்கினேன்.

நொடியில் பதில் வந்தது. என்ன பதில்? ‘ஒரு மைலுக்குள் ஆதி ஆந்திரர் குடியிருப்பு இருந்து, அந்தக் குடி இருப்பில் இருக்கும் பிள்ளைகளைச் சேர்க்கா விட்டால்தான் அந்த ஆபத்து’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/94&oldid=623467" இலிருந்து மீள்விக்கப்பட்டது