பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு து சந்தரவடிவேலு 79

வெகுவியை அடக்கிக்கொண்டேன். ‘ஆதி ஆந்திரர்கள் குடி யிருப்பில், ஒரு தொடக்கப் பள்ளி தொடங்க இசைவு கொடுக்கலாமா?’ என்று வினவினேன்.

தலைமை ஆசிரியர் வாய் திறக்கவில்லை. ஊரார் ஒருவர் பதில் - பிளார்.

‘மாவட்ட ஆட்சிக்குழு ஒப்புக்கொண்டால், கொடுக்கலாம்’ என்று அமைதியாகக் கூறினார். அப்போது, அதில் உள்ள சூது புரியவில்லை. பார்ப் பள்ளியிலிருந்து குடியிருப்புப் பகுதிக்கு நடந்தே சென்றேன். பவளவு தொலைவு? பழைய காலக் கணக்குப்படி, ஒரு மைல் ஆறு பரிவாங்கு.

குடியிருப்புக்குள் சென்றேன்.

|ான்கு அடி மண் சுவர் வைத்து, பனை ஒலை வேய்ந்த, க’ டத்திற்குள் அழைத்துச் சென்றார்கள்.

கயை நன்றாக மெழுகப்பட்டிருந்தது. ஒட்டடை இல்லாத கட்டடம். அதுதான், பழங்குடி மக்கள் தாங்களாகவே நடத்தி வந்த தொடக்கப் பள்ளியாம்.

அதை நான்கு ஆண்டுகளாக நடத்தி வந்தார்கள். கற்போர் வருகை ாய்வளவு? நூற்றுமுப்பதற்கும் மேல்.

ஆசிரியர்கள்? மூவர். அவர்கள் தகுதி? எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால் ஆசிரியப் பயிற்சி பெறாதவர்கள். பயிற்சியைவிடப் பெரிய தகுதி அவர்களுக்கு இருந்தது; அவர்கள் மூவருமே பழங்குடி மக்கள். எனவே, ஆதி ஆந்திரர்களோடு உறவாடினார்கள்.

தங்கள் இனப் பிள்ளைகளைப் படிக்க வைத்து, ஆளாக்குகிறோம் ான்ற உள்ள உணர்வோடும், ஆர்வத்தோடும், பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.

அவ் வாசிரியர்களுக்கு எவர் ஊதியம் தந்தார்கள்? அந்தக் குடி இருப்பைச் சேர்ந்தவர்கள்.

அந்தக் குடியிருப்பில் கல் வீடு ஒன்று கூட இல்லை. அவ்வளவு அழைகள் அத்தனை பேரும் இருந்தால் என்ன?

ஆசிரியர்கள் மூவருக்கும் தங்களுக்குள் முறைபோட்டுக் கொண்டு சாப்பாடு போட்டார்கள்; இரு வேளை உணவு அளித்தார்கள்; மேற்கொண்டு, கைச் செலவிற்கென்று, ஆளுக்கு அய்ந்து ரூபாய்கள் ங்ெகள் தோறும் தந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/95&oldid=623468" இலிருந்து மீள்விக்கப்பட்டது