பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,ெ து. சுந்தரவடிவேலு 81

உரிமைக்காகப் போராடியவர்கள், இன்னல் பட்டவர்கள் பலர்.

அவர்களில் பெரும்பாலோர் பெற்ற ஆதாயம் ஏதும் இல்லை.

திருப்பூர் குமரன் நாட்டின் மானத்தைக் காக்கும் பணியில் அடிபட்டு மாண்டார். அவர் தி யாகம் எந்தக் குமரனுக்கும் நினைவுக்கு வருவதில்லை.

லாலா லஜபதிராய்

பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராயின் தியாகம் தெரியுமா? வழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலேயே, ஆண்டுக்கு அறுபதாயிரம் சம்பாதித்த வழக்கறிஞர் லஜபதியாவார்.

அதில் பத்தாயிரம் ரூபாய்களை மட்டும் தம் குடும்பச் செலவுக்கு எடுத்துக் கொண்டு, மீதி அய்ம்பது ஆயிரத்தைப் பொதுப் பணிக்கு - கல்வித் தொண்டுக்கு வழங்கிய வள்ளல் லாலா லஜபதிராய் என்பது யாருக்குத் தெரியும்?

பிரிட்டானியப் பேரரசு அவர்களைக் கண்டு அஞ்சி நடுநடுங்கியது. அவர்களை இந்தியாவை விட்டு நாடு கடத்தியது. அப்படி நாடு கடத்தப்பட்ட பெருமை பெற்றவர் பெரியவர் லாலா லஜபதிராய்

~Q], .

வ.உ.சி- திரு.வி.க

அத்தகைய சான்றோர் காவல் துறையினரின் தடியடியால் மாண்டு, பிமைத் தீயை வளர்த்தார் என்பதை நினைக்கிறோமா? நினைத்தால் செம்மைப்பட்டு இருப்போம். கப்பலோட்டிய தமிழராம் சிதம்பரம் பிள்ளையை வாடவிட்டுக் கிடந்தவர்கள் அல்லவா நாம்? தேடி வந்த அன்பளிப்பை மறுத்த, திரு.வி.க. கலியாணசுந்தரனாரை நினைத்த துண்டா? நாமும் நம் பண்பாடும்!

தூக்குக் கயிற்றை முத்தமிட்டு மாண்ட, மாண்புடைய வீரர் பகத்சிங், பதிந்திர தாஸ் போன்றவர்களின் உயிர்ப்பலியால் பெற்ற தன்னாட்சி

பிமையைக் காக்கத் தியாகம் செய்ய முன் வருவோர் எங்கே?

தனக்கென்று ஒன்றுமில்லாது இருட் சிறைக்கு மீண்டும் மீண்டும் சென்று பலமுறை உண்ணா நோன்பு இருந்து, உரிமையைப் பெற்றுத் தந்த காந்தியாருக்கு நாம் செய்த நன்றிக் கடன் என்ன?

துப்பாக்கிக் குண்டைப் பாய்ச்சி மாய்த்தது. அதோடு நின்றோமா? முப்பத்தைந்து ஆண்டுகளாக மூலைக்கு மூலை, சமயக் கலவரத்தையே, சாதிச்சண்டைகளையே வளர்த்துவிட்டு நாட்டின் நாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/97&oldid=623470" இலிருந்து மீள்விக்கப்பட்டது