பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு - 83

கே.வி. அழகிரிசாமி

இருபதாண்டு காலம், தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று, முழங்கிய கோடையிடி எவராலும் விலை பேசி வாங்க முடியாத தன்மான இயக்கத் தளபதி, அஞ்சாநெஞ்சன் பட்டுக் கோட்டை கே.வி. அழகிரிசாமி பேசிப் பேசி, என்புருக்கி நோயால் மாண்டது சமுதாயத்திற்காகவே என்பதை அதற்குள் மறந்து விட்டோமே!

குத்துளசி குருசாமி

பெரியாரிடம் இரண்டறக் கலந்த, முதல் பட்டதாரி, சா. குருசாமி ஆவார் கொள்கைக்காகப் பெருவிலை கொடுத்த, குத்துாசி குருசாமியார், பெரியாரின் சிந்தனையாக, குரலாக, பேனாவாகச் செயல்பட்டு, எழுதி எழுதி, ஆட்சியாளரையும் பொது மக்களையும் அடி தெரியக் கலக்கினது மறந்து போனதே!

அவர், ‘வெள்ளித் தோட்டாக்களை வீசுங்கள்’ என்று எழுதினார். கேட்டதற்கும் மேலே அய்ந்தாறு பங்கு பணம் பெரியாருக்குக் குவிந்தது. h

பெரியாரின் தன்னல மறுப்பையும் மீறி அவர்க்குப் பொது மக்கள் சார்பில் வேனை வாங்கித்தர ஏற்பாடு செய்தார், குத்துசி குருசாமியார்.

தனிப்பட்ட முறையில் தங்களுக்குள் இருந்த நட்பின் நெருக்கத்தையும் பாராமல், பெரியாரை ஆதரிப்பதற்காக, அறிஞர் அண்ணாவைக் கடுமையாகச் சாடினார், குத்துாசி குருசாமி. s

திருமதி. குஞ்சிதம் குருசாமிக்குச் சென்னை மாநகராட்சி, கல்வி அலுவலர் பதவியைக் கொடுக்கச் செய்ததற்காகவும், அண்ணாவுக்குத் தாட்சணியப்படாமல், பெரியாரைத் தமக்கே உரிய சூட்டோடு ஆதரித்தார். அதற்காக அண்ணாவைத் தொடர்ந்து சாடினார்.

அவர் மட்டுமா தன்மான இயக்கத்தின் இரத்த நாளமாகப் பயன்பட்டார்; அவருடைய வாழ்க்கைத் துணைவியார், திருமதி. குஞ்சிதமும் எண்ணற்ற இயக்கக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பங்கு கொண்டுள்ளார். முக்கிய மாநாடுகளில் தலைமை தாங்கியுள்ளார். இவை எல்லாம் கதைகளாகத் தோன்றுகின்றனவா இளைய தலைமுறைக்கு?

பெரியாருக்கு எழுதிய கதை

அவருடைய தன்மான உணர்விற்கு ஊறு செய்து, குருசாமியாரை வெளியேற்றும் சதியில் வெற்றி பெற்ற பிறகும், ‘பெரியாருக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/99&oldid=623472" இலிருந்து மீள்விக்கப்பட்டது