பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நினைவு அலைகள் 'அய்யா, ஒன்றும் சொல்லவில்லை. நானாக அதைப்பற்றிப் பேசுவது நன்றாக இராது” இதுவே அடுத்து அடுத்துக் கிடைத்த பதில். படத்திறப்பு விழாவன்று முற்பகலும் மேற்கூறிய பதிலே கிடைத்தது. நான் கவலையில் ஆழ்ந்தேன். “நல்ல மரபு கெட்டுவிடுமே! பலருடைய துாற்றலுக்கு ஆளாகிவிடுவோமே” என்ற ஏக்கத்தால் என் துக்கம் கெட்டது. விழா குறிப்பிட்டபடி சிறப்பாக நடந்தது. முதலமைச்சர் காமராசர், என் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார் மகிழ்ச்சியோடு உரையாற்றினார். மூன்று நான்கு திங்களுக்குள் பாராட்ட என்ன இருக்கும்? முதலமைச்சரின் உரை முதலமைச்சர் காமராசரின் உரையின் சுருக்கத்தைப் படியுங்கள். “பெரிய பதவிக்கு வந்த ஒருவர், பல்லாண்டு நற்பணியாற்றி ஒய்வு பெறும்போதே, அவருடைய படத்தைத் திறந்து வைப்பது வழக்கம். அவரைப் பெருமைப்படுத்துவதற்கானால் அப்படிக் காத்திருக்க வேண்டும். "நான் அந்த வழக்கம் தெரியாமல், இந் நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொள்ளவில்லை. தெரிந்தும் ஏன் ஒப்புக் கொண்டேன்? “இங்கே நெ.து. சுவின் படத்தைத் திறந்து வைப்பது அவருக்குப் பெருமைதான்.அதைவிட இது உங்க்ளை ஊக்குவிக்க உதவுமென்று எண்ணியே, திறந்து வைக்க இசைந்தேன். நெ. து. சுவை எனக்கு முன்பு தெரியாது. ஆனால் அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். "அவர் திண்ணைப் பள்ளிக்கூடமும் இல்லாத கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். வெளியூர் போய்ப் படிக்க வேண்டிய தொல்லையையும் பொருட்படுத்தாது அக்கறையோடு படித்தார். “எந்த வகுப்பிலும் தவறாமல் தேர்ச்சி பெற்றார். பெரிய எம். ஏ பட்டம் பெற்று இருந்தாலும் எல்லோரையும் மதித்துப் பழகுகிறார் “எந்த வேலையிலிருந்தாலும் ஆர்வத்தோடு உழைக்கிறார்: நேர்மையாகப் பாடுபடுகிறார். “அதை நான் எப்படித் தெரிந்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/100&oldid=787885" இலிருந்து மீள்விக்கப்பட்டது