பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(முன்னன் படத்தைத் திறந்தார் — 61 "நான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவனாக இருந்தபோது, கல்வித் துறையில் தொடர்புடைய பல பிரிவினர் என்னிடம் வந்து இதவி கேட்பார்கள். . - "மாணவர்கள், கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுக்க வேண்டுவார்கள். "நிர்வாகிகள் மான்ய உதவிகேட்டு வருவார்கள். "ஆசிரியர்கள், நிர்வாகிகள்மேல் புகார் சொல்லிக்கொண் வருவார்கள். - "யார் வந்தாலும் நெ. து. சுவுக்கு ஒருசொல் சொன்னால் போதும், நியாயம் இருந்தால், அவர் உதவி செய்வார் என்று tண்ணிடம் சொல்வார்கள். * ா "நீங்கள் சொல்வது "நெ. து. சு.வின் பார்வையில் வரும் சங்கதியானால் சரி இல்லாவிட்டால்_?" என்று நான் அவர்களைத் திருப்பிக் கேட்டது உண்டு. "சகாக்கள் பார்க்கும் பணியாக இருந்தாலும் கோரிக்கை நியாயம் என்று பட்டுவிட்டால், நெ.து. சு. உரியவர் இடம் சொல்லி டித்துக் கொடுப்பார் என்பார்கள். இப்படி, எல்லாப் ரிவினருடைய நம்பிக்கைக்கும் உரியவர் என்பதால், நெ. து. சுவை இயக்குநராக நியமித்தோம். "இந்தக் கல்லூரி மாணவர்களுக்கு இயக்குநர் நெ. து. சுவின் திருவுருவப்படத்தை நாள்தோறும் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. " ..., "அதைப் பார்க்கும்போது, நாமும் அவரைப்போல அக்கறையாகப் படிக்க வேண்டுமென்னும் ஊக்கம் பிறக்கும். சாதாரண மக்களாலும் படித்துத் தேர்ச்சி பெறமுடியுமென்ற i. நம்பிக்கை சுரக்கும். "அவரது அயராத உழைப்பு, இனிமையான உதவும் இயல்பு, தெரி மை, பட்சபாதமின்மை ஆகிய நற்குணங்கள் உங்களுக்கு நினைவுக்கு வரும். அவற்றை நினைக்க நினைக்க நீங்களும் பொறுப்பான பதவிகளுக்கு வந்து நற்பணி ஆற்றிப் பாராட்டுப் பெற வேண்டும் என்னும் எழுச்சி உண்டாகும். "இப்படி உங்களுக்குப் பயன்படும் என்பதால்தான் இயக்குநர் 燃 சுந்தரவடிவேலுவின் படத்தைத் திறந்து வைக்க ஒப்புக் காண்டேன்! மகிழ்ச்சியோடு திறந்து வைக்கிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/101&oldid=787886" இலிருந்து மீள்விக்கப்பட்டது