பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

பத்தாண்டுகள் மாதம் இருமுறை என்னுடைய நினைவு அலைகள் தொடர்ந்து தம்முடைய சத்ய கங்கை'யில் வெளி வருவதற்கு இடம் கொடுத்த அருமை நண்பர் பகீரதன் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்ய வல்லேன். பகீரதன் உதவவில்லை என்றால், 2300 பக்கங்களில் என் வரலாறு வெளிவர வாய்ப்பு நேர்ந்திருக்காது. அவருக்கு என் நன்றி நிறைந்த வாழ்த்துகள்.

தமிழ் நூல்களை வெளியிட்டு மகிழ்ச்சி கொள்வதில் முன்னணியில் இருப்பவர் எனது அருமை நண்பர் வானதி திருநாவுக்கரசு அவர்களாவார். அவர் என்னுடைய எட்டு நூல்களை ஏற்கெனவே வெளியிட்டு உதவியுள்ளார்.

நினைவு அலைகள் முதல் பகுதியை (894+40=934) பக்கத்தில் டிசம்பர் 1983லும், இரண்டாம் பகுதியை (494+28=522) பக்கத்தில் ஆகஸ்ட் 1985லும் வெளியிட்டுள்ளார். இது அவர் எனக்காக வெளியிடும் பதினோராவது நூலாகும். எனக்காக அவர் மொத்தத்தில், 11 நூல்களையும் சேர்த்து, 3500 பக்கங்களுக்கு மேல் அச்சேற்றி வெளியிட்டுள்ளார். ‘நினைவு அலைகளை அவர் மிகப் பெரும் பொருளை முதலீடு செய்து துணிச்சலோடு வெளியிட்டமைக்குப் பெரிதும் நன்றி யுடையேன்.

'நினைவு அலைகள்' மூன்று பகுதிகளையும் அச்சிட்ட நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர் கவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்களுக்கு மிக நன்றி உடையேன்.

“நினைவு அலைகள்' மூன்றாம் பகுதியினைத் தொடர் கட்டுரைகளாகச் சத்திய கங்கை எழுதுகையில், சில கட்டுரைகளை நான் சொல்லச் சொல்ல எழுதி உதவி புரிந்த கவிஞர் திரு. முருகு சரணன், திரு. கோ. வேதநாயகம் ஆகியோருக்கு நன்றி உடையேன்.

'நினைவு அலைகள்' எல்லாப் பகுதிகளையும் தொகுத்து, வகுத்து, பிழை திருத்தி வெளியிட துணை நிற்கும் பேராசிரியர் திரு. தி, வ. மெய்கண்டார் அவர்களுக்கு மிகக் கடமைப்பட்டுள்ளேன்.


30, கிழக்குப் பூங்கா சாலை, நெ. து. சுந்தரவடிவேலு செனாய் நகர், சென்னை - 600 030. 12–10–1988

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/16&oldid=480537" இலிருந்து மீள்விக்கப்பட்டது