பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Шграммын மச்சர் காமராசருக்கு மாலை சூட்டினேன் 7 நேரே, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அறைக்கு இட்டுச் சென்றார். அமைச்சர் அறையில் கல்விச் செயலர், சி. எஸ்.இராமச்சந்திரன் இருந்தார். இயக்குநர், முறைப்படி என்னை இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், எனக்குக் கலக்கமூட்டும் ஆலோசனைகளைக் கூறினார், "டாக்டர் எம். டி. பாலை விட்டுவிட்டு நெ. து. சுவை இயக்குநராக நியமித்துவிட்டதால், முந்தியவரை அலுவலகத்தில் வைத்திருந்தால், அலுவல் கெடும். பால் ஒத்துழைப்பாரென்று ாதிரி பார்க்கக்கூடாது. அவரை வேறு பதவிக்கு அனுப்பிவிட வேண்டும். "டாக்டர் பாலை மட்டும் மாற்றினால், பேச்சுக்கு இடமாகும். இன்றும் இரு துணை இயக்குநர்களையும் மாற்றி விட்டு, புதியவர்களை அங்கு அமர்த்தலாம். "அவர்கள் புதிய இயக்குநரிடம் பற்றோடு நடந்து கொள்வார்கள். மிக ஒத்துழைப்பு தருவார்கள்” என்று சொன்னதோடு, மூன்று அம்மையாரின் பெயர்களை இயக்குநர் கூறினார். அதைக் கேட்டபோது நான் மட்டுமே வியப்படைந்தேன்! அம்முவரில் ஒருவர், முதலியார் சாதியாகக் கருதப்பட்டார். மற்றொருவர் அய்யராகக் கருதப்பட்டார். மூன்றாவது அம்மையார் சிரியன் கிறிஸ்தவர்; மூவரில் வயதில் இளையவர். அமைச்சர் அதைப்பற்றி என்னுடைய கருத்தைக் கேட்டார். 'எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்துச் சமாளிப்பேனென்ற நம்பிக்கையில்தான் என்னை இயக்குநராக உயர்த்தியுள்ளிர்கள். பெரும் பதவியை இழந்த புண் ஒரளவாவது ஆறும் என்று ாதிரி பார்த்து, நேற்று முதன்முத்ல் டாக்டர் பாலைப் பார்த்து, ானோடு என் அலுவலகத்திலேயே தொடர்ந்து இருக்கும்படி வேண்டினேன் "அவரும் இசைவு தந்தார். அப்படி இருக்க, அவரை வெளியே அறுப்ப நான் இசைவது துரோகமாகும். "நீங்கள் சொன்ன மூன்று பேரும் தனிப்பட்ட முறையில் வாரு வேண்டி யவர் கள். ஆனால் இப்போதுள்ள விதிமுறைகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/47&oldid=788275" இலிருந்து மீள்விக்கப்பட்டது