பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B நினைவு அலைகள் படி, துணை இயக்குநராகும் தகுதியினைப் பெறாதவர்கள்” என்று சொல்லிக் கொண்டிருக்கையில், செயலர், "அவர்க்ளுக்கு வேண்டுமானால் விதிவிலக்கு அளிப்பது பற்றிச் சிந்திக்கலாம்” என்று கோடு காட்டினார். "அது நிர்வாகத்திற்குக் கெட்ட பெயரைக் கொண்டு வரும். புது இயக்குநர், பதவிக்கு வந்ததும் வராததுமாக, இருக்கிறவர்களை மாற்றிவிட்டு, விதிமுறைகளைத் தளர்த்தி மேனிலைக்குக் கொண்டு வந்துவிட்டார் என்று பழிக்க இடம் கொடுப்பது சரியல்ல. "என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள்” என்று நான் வேண்டினேன். - இயக்குநர், என்னை மனமாற்றம் செய்ய சில மணித்துளிகள் முயன்றபின் அமைச்சர், தலையிட்டார். "அவருக்கு நல்லது என்று நாம் சில ஆலோசனை கூறினோம். அவருக்கு விருப்பமில்லை என்று தெரிகிறது. அதோடு விட்டுவிடுவோம்” என்று முடிவு கூறினார். முன்கூட்டிச் சிந்திக்கவும் வாய்ப்பு கொடாமல் இயக்குநர் இப்படி நியமன ஆலோசனைகளைக் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. = o அதோடு, ஒரு துறையில் தலைவரை நியமிக்கும் ஆணையைப் பிறப்பிக்கும்போது, உரிய செயலர், தொலைபேசி வழியாக அலுவலருக்குத் தெரிவிப்பது எழுதாச் சட்டம். - அந்த நாகரிக மரப்ை என் நியமனத்தின்போது பின்பற்ற வில்லை. அது எச்சரிக்கையாக அமைந்தது. - ஏதிலாரோடு பணியாற்ற வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது. -- பகைமையை வளர்க்காமல், ஏற்றுக்கொண்ட துறையில் தொண்டாற்ற முடிவு செய்துகொண்டேன். 2. தலைவர்களின் பாராட்டு நாயுடு துணைவேந்தரானார் சில நாள்கள் வரை உள்ளுர், வெளியூர் அன்பர்கள் வந்து வாழ்த்தியபடியே இருந்தார்கள். * - ■

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/48&oldid=788286" இலிருந்து மீள்விக்கப்பட்டது