பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 * நினைவு அலைகள் பயணம் செல்வதற்குமுன், நான் இயக்குநராகிவிட்டேன். - துறைத்தலைவர்கள், தங்கள் பயணம் பற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்பதே விதி. * மேலே உள்ளவர்களின் இசைவு பெற வேண்டும் என்ற விதி இல்லை. என்வே, என் பயண நிரலின் படி ஒன்றைக் கல்விச் செயலருக்கும் கல்வி அமைச்சருக்கும் அனுப்பி வைத்தேன். எனவே, காட்பாடி செல்ல ஏற்பாடுகள் செய்து இருந்தேன். புறப்படுவதற்கு முந்தியநாள் மாலை, கல்விச் செயலர் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார். “நாளை காலை 11 மணிக்கு என்னை என் அலுவலகத்தில் காணவும்” என்றார். “இன்றிரவே, வீட்டிற்கு வந்து பார்க்கட்டுமா? நாளைக் காலை வண்டியில் காட்பாடிக்குப் புறப்பட வேண்டியிருக்கிறது. ஒருநாள் பொறுக்கக்கூடிய விஷயமாயின், நாளை மறுநாள் வந்து காண்கிறேன்” என்றேன். - “இன்று பேச செளகரியப்படாது; நாளை பதினோரு மணிக்கே பார்த்தாக வேண்டும்” என்று அடம் பிடித்தார். “அமெரிக்கர் ஒருவரின் அழைப்பை ஏற்று, பொது நிகழ்ச்சிக்காகக் காட்பாடி செல்கிறேன். அத் திட்டத்தை மாற்றினால், நெ. து. சுவைத் தவறாகக் கருதுவதோடு, இந்தியர்களைப் பற்றி மதிப்புக் குறையலாம்”என்று சொன்னேன். செயலர் மனம் மாறவில்லை. - 'வலிய வம்பிற்கு இழுக்கிறாரோ என்று அய்யப்பட்டேன். இருப்பினும் பொறுத்துக்கொண்டேன். - H - காட்பாடிக்கு மறுநாள் பிற்பகல் வந்து சேர்வதாகத் தந்தி கொடுத்தேன். அடுத்த நாள் காலை குறித்த நேரத்திற்கு முன்பே தலைமைச் செயலகம் சென்றேன். கல்விச் செயலரின் அறையில் காத்திருந்தேன். 100 மணிக்குச் செயலரிடம் இருந்து தொலைபேசிச் செய்தி வந்தது. என்ன செய்தி? -- - - - - “போன இடத்தில் தங்க நேர்ந்துவிட்டது. இன்று அலுவலகம் வர இயலாது. இயக்குநர் காத்து இருக்க வேண்டாம்” என்பது செய்தி. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/50&oldid=788308" இலிருந்து மீள்விக்கப்பட்டது