பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 == நினைவு அலைகள் "அப்படி நீடித்திருந்தால் நீங்களே எனக்கும் எம். டி. பாலுக்கும் பணிமூப்பு பெற்றவர்களாக இருப்பீர்கள். “இப்போது எனக்குக் கிடைத்த இயக்குநர் பதவி உங்களுக்கே கிடைத்து இருக்கும். “நீங்கள் செய்யாமல் செய்த உதவியால், நான் இப் பெருமையைப் பெற்றுவிட்டேன்” என்று பதில் உரைத்தேன். அதைக் கேட்ட திரு. எம். என். அன்வர் புள்காங்கிதம் அடைந்தார். என்னைக் கட்டித் தழுவிக்கொண்டார். "இப் பெருந்தன்ம்ை என்றும் உங்களுக்குத் துணை நிற்கும்" என்றார். திரு அன்வர், முப்பதுகளின் பாதியில் நேரே மாவட்டக் கல்வி அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதுகலை பட்டதாரியாகிய அவர், நல்ல கல்வி அலுவலர் என்று பெயர் பெற்றார், கை சுத்தமானவர் என்று, பாராட்டுதலையும் பெற்றவர். சென்னை சட்ட மன்றத்திற்கு 1937 இல் பொதுத் தேர்தல் வந்தது. இந்திய முஸ்லீம் லீக் அத் தேர்தலில் பெருத்த அக்கறை காட்டிற்று; திரு. அன்வர் பதவியை உதறிவிட்டுத் தேர்தலில் குதித்து வெற்றியும் பெற்று, சட்டமன்றப் பணியில் சிறந்து விளங்கினார். பிற்காலத்தில் அன்வர் காங்கிரஸ்வாதியாக மாறிவிட்டார். இந்திய நாடாளு மன்றத்தின் மேலவை உறுப்பினராகி, காங்கிரசுக்காரராக ஆக்கமாகப் பணிபுரிந்தார். o அனைவரும் அன்பு பாராட்டினர் பள்ளிகளை நிர்வகித்தோர் 1954இல் பலவகையினர். நூற்றுக்கணக்கான தொடக்கப் பள்ளிகளைத் த்னியார் நடத்தினார்கள். அவர்களிடம் காப்புப் பணம் கேட்பது இல்லை. * "பதிவு பெற்ற பள்ளிக் குழு வேண்டும்’ என்ற விதியும் இல்லை கிறித்தவ திருச்சபைகளின் சார்பில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் நடந்தன. r இராமகிருஷ்ணா மிஷன் சார்பில் சில பள்ளிகள் இயங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/54&oldid=788352" இலிருந்து மீள்விக்கப்பட்டது