பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|H - நினைவு அலைகள் o எல்லோரும் உட்கார்ந்த கம் டாக்டர் இலட்சுமணசாமி முதலியார், 'நீங்கள் இங்கு அரசின் பிரதிநிதி; துணைவேந்தரின் வலக்கரம்: எனக்கு வலப்புறம் இருக்கும் நாற்காலியில்தான் நீங்கள் உட்கார வேண்டும்” என்று, என் காதில் எனக்கு மட்டும் கேட்கும்படி கூறினார். - சென்னைப் பல்கலைக் கழகத்தில் இப்படி ஒரு மரபு பின்பற்றப்பட்டது. ஆட்சிக் குழுக் கூட்டம் முடிந்தவுடன் இறுதியில், அடுத்த அறையில் தேனிர் விருந்து நடக்கும். - அதற்கு ஆகும் செலவைத் துணைவேந்தரோ, உறுப்பினர். களோ முறை போட்டுக்கொண்டு ஏற்றுக் கொள்வார்கள். பல்கலைக் கழகம் செலவு செய்ய வேண்டியது இல்லை. குறிப்பிட்ட கூட்டத்தின் தேனிர் விருந்துச் செலவை ஏற்றுக் கொள்ளும் சக உறுப்பினர், கூட்டம் முடியும் தறுவாயில் எல்லோரையும் விருந்திற்கு வரும்படி அழைத்தார். si ல்லோரும் விருந் து நடக்கும் அடுத்த அறைக்குச் சென்றோம். அங்கே, டாக்டர் செரியன், டாக்டர் முதலியாருக்கு வலப் புறத்தில் அமர்ந்தார். முதலியார், என்னை அழைத்து, தமக்கு இடப் புற நாற்காலியில் உட்காரச் செய்தார். o ஏ. எல். முதலியாரின் அறிவுரை சிற்றுண்டிகளை உண்டோம் காப்பியை . அருந்தினோம். பழக் கலவை கண்ணில் பட்டது. அதைப் பரிமாறுவதற்கு முன்பு, நான் டாக்டர் முதலியாரைப் பார்த்து, "வேறொரு நிகழ்ச்சிக்கு நேரமாகிறது, நான் செல்ல அனுமதியுங்கள்” என்று பணிவுடன் வேண்டினேன். 'இயக்குநரே! நீர் நல்ல பேச்சாளர் என்று கேள்வி. ஆங்கிலத்தைப்போல, தமிழிலும் நன்றாகப் பேசுவீர்களாம். ”ஆகவே நிறைய கிராக்கி இருக்கும். யார் யாரோ அழைப்பார்கள். பல நிகழ்ச்சிகளை ஒப்புக்கொண்டு மலிவாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களைப் பார்ப்பதும் கேட்பதும் அரிதாக இருக்கட்டும்” என்று அறிவுரை கூறினார். அதோடு நிற்கவில்லை. பழக் கலவை பரிமாறுபவரை அழைத்து, எனக்கு முதலில் பரிமாறச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/56&oldid=788374" இலிருந்து மீள்விக்கப்பட்டது