பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 நினைவு அலைகள் அரசரின் கனிவான வேண்டுகோளுக்கு இணங்கினேன் i அண்ணாமலை நகர் சென்றேன். திரு. நாயுடு உடன் வந்தார். பரிசாரகர்கள் இருவர், அதே ரயிலில் சென்னையிலிருந்து சிதம்பரம் வந்தனர். எங்கள் உணவுத் தேவைகளைப் பணிவோடு கவனித்துக் கொண்டார்கள். அந்த விருந்தோம்பலை இயக்குநர் பதவியில் இருக்கும் மட்டும். பதின்மூன்று ஆண்டுகள் பெற்றேன். 3. தில்லிப் பயணம் மிரட்டலுக்குப் பணிந்தனர் நான் பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றதும், இயக்குநர் விட்டுத் தொலைபேசியை என்னுடைய செனாய்நகர் இல்லத்திற்கு மாற்றும்படி என் அலுவலகம் கடிதம் எழுதிற்று. அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர், இதே வேல்ையாக அலைந்தார். தொலைபேசித் துறை மசியவில்லை செயல்படவே இல்லை. ஏறத்தாழ ஒரு திங்கள் வரை, நான் கேட்ட மாற்றம் நடக்கவில்லை. நான் வீட்டிலிருக்கும்போது எவரும் என்னோடு தொலைபேசித் தொடர்பு கொள்ள இயலவில்லை. - நான் காலை எட்டரை மணி முதல் அலுவலகத்தில் இருந்ததால், மேற்படி தொல்லை அளவு அவ்வளவு பெரிதாக ஒருநாள் காலை, ஒன்பதரை மணி அலுவலகத்தில் கோப்புகளைப் பார்ப்பதில் மூழ்கி இருந்தேன். தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசினேன். “என் பாராட்டுக் கடிதம் வந்ததா? சரி, நேரிலும் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/58&oldid=788396" இலிருந்து மீள்விக்கப்பட்டது