பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய எய்ட்ஸ் நோயை ஒழிக்க, இந்தியாவிற்கு 900 கோடி டாலர் பொருளுதவி வழங்கியுள்ள, சமூகப் பொறுப்புள்ள சாதனையாளர்!

வாழ்நாளில் சாதனை படைக்க முடியும், சமுதாய நலத்திற்குப் பங்களிக்க முடியும் என்பதற்கு இவர்கள் வாழ்வு உன்னதமான எடுத்துக்காட்டுகளாகும். வாழ்க்கை என்பது ஒர் ஒட்டப் பந்தயம் மாதிரி! சாதனை படைப்பவர் வாழ்க்கை சாதாரண நூறு மீட்டர், ஆயிரத்தைந்நூறு மீட்டர் ஒட்டப் பந்தயங்கள் அல்லாமல், மாரத்தான் ஒட்டப் பந்தயம் போல் அமைய வேண்டும்!

மக்களாகப் பிறந்தவர், எதையாவது சாதிக்க வேண்டும்! எதிலாவது வெற்றி பெறவேண்டும்! தாம் வாழும் சமுதாயம் போற்றுமாறு புகழ் பெறவேண்டும்! இதற்குச் சாதித்தவர்களை, வெற்றி பெற்றவர்களை, புகழ்பெற வாழ்ந்தவர்களை எப்போதும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்! அல்லது, அத்தகைய வாழ்வு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை ஆழ்ந்து, கருத்தூன்றிப் படித்தறிதல் வேண்டும். அதன்மூலம் தம் ஆற்றலை அளந்து அறிந்து கொண்டு, சமுதாயத்தின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்து கொண்டு, விதிமுறைகளைத் தெளிவாக உணர்ந்து பொறுமையோடு கடைப்பிடித்து, விவேகம் கலந்த வேகத்துடன் செயல்படின் வெற்றி மேல் வெற்றிகளைக் குவிக்கவும், சாதனை படைக்கவும் முடியும்.

மக்களிடம் பரவலாகக் காணப்படும் தாழ்வு மனப்பான் மைக்கு அடிப்படைகளாக அமைந்தவை சாதி, சமய, இன, நிற வேறுபாடுகளாகும். இத் தாழ்வு மனப்பான்மை சமுதாயத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கிறது. தாழ்வு மனப்பான்மை என்பது ஒருவகை மனநோய். தாழ்வு மனப்பான்மைக்கு அஞ்சி ஒடுங்காமல், அடக்கி வெற்றி கொள்ள வேண்டும். இதை அடியோடு அழிக்க உதவ வல்லது கல்வியே! மக்களின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டால் வேதனையே மிஞ்சும்! வேதனையைச் சாதனையாக்க, விழிப்புடனிருந்து தவறு நேரா வகையில் செயலாற்றி வெற்றி பெற உதவும் துணை கல்வி ஒன்றே!

மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரிடத்திலும் ஏதேனும் ஒருவகை ஆற்றல் மறைந்து கிடக்கிறது. இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு பொருளிடத்திலும், உயிரிடத்திலும் ஏதேனும் ஒர் ஆற்றல் இருக்கிறது. ஒர் அறிவு உயிரும் இதற்கு விதிவிலக்கு அன்று உயிரற்ற கல்லிலும் கட்டையிலும்கூடச் சிற்பம் மறைந்து கிடப்பதைத் திறமையுள்ளார் வெளிப்படுத்துவர். மண்ணைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/6&oldid=480519" இலிருந்து மீள்விக்கப்பட்டது