பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நினைவு அலைகள் நான் சென்ற அதே பெட்டியில், அடுத்த அறையில் வணக்கத்திற்குரிய பெரியவர் ஒருவர் காசிக்குப் பயணம் செய்தார் அவருக்கு வடிவேலு பிள்ளை சீடர் நன்றாகத் தெரிந்தவர். திருப்பனந்தாள் ஆதீனகர்த்தர் தவத்திரு காசிவாசி அருள்நம்பித் தம்பிரான் அவர்கள், வடிவேலுவை அடையாளங் கண்டு கொண்டார். - அவரை விசாரித்ததில், புதிய பொதுக்கல்வி இயக்குநர் அப் பெட்டியில் பயணம் செய்வதைத் தம்பிரான் அவர்கள் தெரிந்து கொண்டார். என்னைக் கண்டு வாழ்த்தலாமா என்று வடிவேலு பிள்ளையிடம் கேட்டார். மரியாதை தெரிந்த வடிவேலு பிள்ளை. என் பெட்டிக்கு உடனே வந்து அதை என் காதில் சொன்னார். so “நான் சென்று வணங்குவதே முறை” என்று சொல்லிவிட்டு, நொடியில் திருப்பனந்தாள் ஆதீனகர்த்தர் இருந்த பெட்டிக்குச் சென்றேன். “சந்நிதானத்துக்குப் பணிவான வணக்கம். நான்தான் நெ. து. = - in ---- = 5 ל H சுந்தர வடிவேலு, பொதுக் கல்வி இயக்குநர்” என்றபடியே தலை மடாதிபதி, மூன்று ஆப்பிள் பழங்களை எனக்கு அளித்தார். “பயணமும் பணியும் என்றும் வெற்றிகரமாக இருக்கட்டும்” ான்று அடிகளார் வாழ்த்தினார். -- தேடாமல் வந்த வாழ்த்தோடு, தில்லி போய்ச் சேர்ந்தேன். வழியில் மத்திய ரயில்வேயில், பாதைத் தணிக்கையாளராக வேலை பார்த்துவந்த என் நண்பர் நரசிம்மலு நாயுடு, நாகபுரியில் என்னைக் கண்டு அளவளாவினார். தில்லிக்குப் போகும்போது எல்லாம், அவருக்குத் தகவல் கொடுப்பேன். அவர் புகை வண்டி நிலையத்தில் என்னைக் கண்டு மகிழ்ச்சி ஊட்டுவார். புதுதில்லி புகைவண்டி நிலையத்தில் வண்டி நின்றது. தலையை வெளியே நீட்டினேன். மின் விளக்கொளியில், எனக்கு அறிமுகமான முகம் ஏதும் தென்படவில்லை. *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/62&oldid=788440" இலிருந்து மீள்விக்கப்பட்டது