பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நினைவு அலைகள் சில வாரங்கள் சென்றன. சென்னையில் இராமகிருஷ்வை மிஷனில் தொண்டாற்றிக் கொண்டிருந்த துறவி ஒருவர் வந்து என்னைக் கண்டார். நரசிம்மனை விடுவிக்க வேண்டினார். நரசிம்மனும் தம்மை விடுவிக்கும்படி எனக்கு ஒரு மனு கொடுத்தார். * முறைப்படி, அரசு ஊழியத்தில் இருந்து விடுபட்டார். ஒராண்டு கல்கத்தாவில் முன் பயிற்சி பெற்றார் நரசிம்மன். அப்போது, துறவு வாழ்க்கை தமக்குப் பொருந்தாதென்று நினைத்தார். ா * = சாமியார்களின் ஒப்புதலோடு, அந்தப் பயிற்சியிலிருந்தும் விலகிக் கொண்டார். இளந்துறவி நிலையைத் துறந்த நரசிம்மன், கல்கத்தாவில் ந்து புதுதில்லிக்குச் சென்றார். - ருந்து புதுதி கு - அங்கு ஒரு நிறுவனத்தில் சுருக்கு எழுத்தராகச் சேர்ந்து பணியாற்றினார். --- அஞ்சல் கல்வியைத் தொடங்குங்கள் சென்னை நண்பர்கள் வழியாக என் வருகையைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர், காலைக் குளிரையும் பாராமல் என்னை வரவேற்க வந்துவிட்டார். அந்தப் பாச உணர்வு யாரிடம் மிகுந்திருக்கிறதோ, அவரை அது வளர்க்கும். - அதைக் குறைவாகப் பெற்றவர்கள், சாண் ஏற முழம் சறுக்கும் நிலையிலேயே அவதிப்படுவார்கள். என் பெட்டி பேழைகளை வண்டியில் இருந்து இறக்க நரசிம்மன் உதவினார். அதற்குள் அமைச்சர் அளகேசன் வீட்டிலிருந்து வந்தவர் என்னிடம் வந்து சேர்ந்தார். - தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, கார் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார். - நான், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை, அவருடைய பழைய மாணவர்களோடு அனுப்பிவிட்டு, அளகேசன் இல்லத்திற்குப் புறப்பட்டேன். நரசிம்மன், உடன் வந்தார். =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/64&oldid=788462" இலிருந்து மீள்விக்கப்பட்டது