பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

பிசைந்து உருவம் சமைக்கவும் கல்லையோ, மரக் கட்டையையோ செதுக்கிச் சிலை அமைக்கவும் கலைஞன் தேவை! ஆறறிவு படைத்த மனிதன் முயன்றால் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள முடியும். அப்படிச் செதுக்கிக் கொண்டவன் மட்டுமே சமுதாயத்திற்குப் பயன்பட வாழ்ந்து வழி காட்ட முடியும். . கல்வித் துறையின் நடவடிக்கை ஒவ்வொன்றும் பிற்காலத்த வருக்கு வெளிப்படையாகத் தெரிய வேண்டும் எனக் கருதியதாலும், கல்வித் துறையில் உயர் நிலை எய்துவதற்காகப் பிற்காலத்தவர் உரிய தகவல்களைப் பெறுவதற்கு இயன்றவற்றைச் செய்தல் வேண்டும் என்கிற நோக்கத்திலும் நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள், தாம் பணியாற்றிய காலத்தில் இருந்த அரசு அமைப்பு, அந்த அமைப்பு மேற்கொண்ட பொறுப்பு, ஆற்றிய பணிகள், மேற்கொண்ட சில திட்டங்கள், அலுவலர்களின் அதிகார வரம்புகள், அமைப்புகளுக்கும் அலுவலர்களுக்கும் இருந்த விதிமுறைகள், பெறப்பட்ட அறிவுரைகள் முதலான தகவல்களைத் தெளிவாகத் தமது நினைவு அலைகளில் முறைப்படுத்தித் தந்துள்ளார். அன்றியும், குறிப்பிட்ட சில திட்டங்கள் தொடங்கப் பெற்றமுறை, அத் திட்டங்கள் தொடங்கப் பெறுவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்ட விவரங்கள், அத் திட்டங்களின் அவசியம் குறித்துப் பொதுமக்களுக்கு அறிவித்ததோடு பொதுமக்கள் அவற்றில் பங்குபெறும் வகையில் உருவாக்கிய சமுதாய விழிப்புணர்வு, திட்டச் செயல்பாடுகளில் பொதுமக்களையும் ஈடுபடுத்திய பாங்கு, திட்டவெற்றிக்கு வழி வகுத்தமுறை, முதலானவற்றை விளக்கியுள்ளதோடு, மக்களோடு நேரடித் தொடர்புகொள்ளும் அலுவலர்களும் அதிகாரிகளும் தத்தம் பொறுப்புணர்ந்து செயல்படுவதற்குரிய வழிகாட்டும் தகவல்கள் முதலானவற்றையும் வகைப்பட அளித்துள்ளார்.

நெ. து. சு. கொடுத்துள்ள தகவல்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே உரியவை அல்ல. இத் தகவல்கள் காலத்தைக் கடந்து நிலைத்து நின்று, கல்வித் துறையின் அனைத்துப் பிரிவு அலுவலர்களுக்கும் வழிகாட்டவல்லவை. சமுதாயத்தின் சுதந்திரமான இயக்கத்திற்கு இன்றியமையாத கல்வியை வழங்கும் துறை, தவறுகள் நேராத வகையில் செயல்பட வழிவகுக்க வல்லவை!

ஆதாயம் எதையும் எதிர்பார்க்காமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல், விளம்பர மோகத்தில் சிக்காமல், தன்னார்வத்தோடு மக்களைக் கல்வித் தொண்டில் ஈடுபட வைத்தவர் நெ. து. சு. அதன் மூலம் ஆண்டாண்டு. காலமாகத் தொடர்ந்து வந்த மனித நேயத்திற்கும் பண்பாட்டிற்கும் புத்துயிரளித்தவர். பொருளாதார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/7&oldid=480521" இலிருந்து மீள்விக்கப்பட்டது