பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՈ - நினைவு அலைகள் - "அந்த அடிப்படைப் பணிக்குப் போதிய நிதி ஒதுக்கிய பிறகும் நிதி மிச்சமாக இருந்தால், அடுத்த கட்டமாகிய நடுநிலைப் பள்ளி.. கல்வியை வளர்ப்பதில் முனையலாம். - = "இவற்றிற்கு வேண்டிய ஆசிரியர்களை எங்கிருந்து பெறுவது? உயர்நிலைப் பள்ளிகளில் இருந்தே பெற வேண்டும். 'எனவே, இயற்கையாக, அந்த நிலையில் ஏற்படும் வளர்ச்சியைத் தடை செய்யக்கூடாது. "அத்தகைய முன்னேற்றத்திற்கும் இடம் இருக்கும் வகையில், உள்ள நிதியைப் பங்குபோட வேண்டும். “தொழிற்கல்வியின் காலம் அய்ந்தாறு ஆண்டுகள் ஆகும். பட்டம் பெற்றவர்கள், பொறுப்பான நிர்வாகப் பணிகளைச் சமாளிக்க முதிர்ச்சி அடைய அய்ந்து முதல் பத்து ஆண்டுகள் வரைகூடப் பிடிக்கும். . 'எனவே, இப் பிரிவில் பதினைந்து இருபது ஆண்டு தொலைநோக்குத் தேவை. 'அந்தக் கால தேவையைக் கணக்கில் கொண்டு இப்போதைய தொழிற்கல்வியில் போதிய பயிற்சிக்கு இடம் ஏற்பாடு செய்ய வேண்டும். * i. “ஒரே முன்னுரிமை, நாடு பூர்ாவிற்கும் ஒத்துவராதாகையால், சிற்சில நீக்கு போக்குகளுக்கு இடம் விட்டுத் திட்டம் திட்ட வேண்டும்.தீட்டிய திட்டத்தை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும். "அப்போதுதான், மக்களிடம் நம்பிக்கை வளரும். நம்பிக்கை பெருகினால்தான், பொது மக்கள் அரசுகளோடு ஆர்வமாக ஒத்துழைப்பார்கள். = . o “சென்னை மாநிலத்தில், பள்ளி இல்லாத ஊர்களில் பள்ளி வைத்தலையும், எல்லாப் பள்ளிகளிலும் அய்ந்தாம் வகுப்புவரை எல்லோர்க்கும் இலவசக் கல்வி கொடுப்பதையும் முன்னுரிமைப் படுத்தும்படி அரசுக்குப் பரிந்துரைக்க எண்ணி உள்ளேன். "இவற்றிற்குமேல், நிதி இருக்குமானால், நடுநிலைப் பள்ளி வளர்ச்சியையும் முடுக்கும்படி ஆலோசனை கூறப்படும்.” மேற்கூறிய கருத்துகளைக் கூறினேன். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/70&oldid=788528" இலிருந்து மீள்விக்கப்பட்டது