பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நினைவு அலைகள் தாம் இந்தியக் கல்வி அமைச்சர், மாண்புமிகு அப்துல்கலாம் ஆசாதைக் கண்டு பேசிவிட்டு, மறுநாள் கூட்டத்தில் குறிப்பு தருவதாகக் கூறினார். - - அடுத்தநாள் கூடினோம். தொடக்கத்திலேயே, தலைவர் அறிவிப்பு ஒன்றைக் கொடுத்தார். அது என்ன? "நான் நேற்று மாலை, கல்வி அமைச்சரோடு விரிவாகப் பேசினேன். ஆயிரங்கோடி ரூபாய்களுக்குத் தாராளமாகத் திட்டம் போடுங்கள். "எண்ணுாறு கோடி ரூபாய்களுக்குக் குறைந்தால் கல்வி அமைச்சகம் அதை ஏற்காது என்று அமைச்சர் கூறினார்.” அப்புறம் கல்வியாளர்களுக்கு ஒரே குதுகலம், நாங்கள் அனைவருமாக ஆயிரம் கோடி ரூபாய்க்குத் திட்டம் தீட்டும் எண்ணத்தோடு கலைந்தோம். இடையில் தமிழ்நாட்டு, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன், “நெ. து. சு. இவர்கள் கற்பனை உலகில் மிதக்கிறார்கள் சட்டியில் இருந்தால், பெரிய அகப்பையைக்கூடப் போடலாம். முந்நூறு கோடி வாங்கிவிட்டால் பூரிக்கலாம்” என்று தமிழில் மெல்ல உரைத்தார். - எது உண்மையாயிற் று? கோதண்டராமன் ஆருடம் பலித்தது. அனைத் திந்தியாவிற்கும் முந்நூற்று இருபது கோடி ருபாய்தான் என்பது இறுதி ஒதுக்கீடு. -- தொடர்பும் தெம்பும் பெற்றேன் அம் மாநாடு எனக்கு விரிந்த பார்வையைத் தந்தது. கல்விக்குள் புதைந்து கிடக்கும் சிக்கல்களைப் புரிய வைத்தது. புதிய அறிஞர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அனைத்துக்கும் மேலாக, சக இயக்குநர்கள் பலரிடம் மதிப்பையும் நல்லெண்ணத்தையும் பெற வாய்ப்பாயிற்று. நான், அதற்குமுன், புது தில்லியைச் சுற்றிப் பார்த்ததில்லை. இம்முறை அமைச்சர் அளகேசனின் தனி அலுவலர் என்னை அழைத்துச் சென்று, பல இடங்களைக் காட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/72&oldid=788551" இலிருந்து மீள்விக்கப்பட்டது